முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > தலவாகலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி- மற்றொருவர் படுங்காயம்!!

தலவாகலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி- மற்றொருவர் படுங்காயம்!!

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் தலவாகலை மேல்கொத்மலை நீர்தேக்கத்திற்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளதாக தலவாகலை பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 13.06.2019. வியாழக்கிழமை இரவு 07.30 மணி அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

நாவலபிட்டியில் இருந்து நுவரெலியா பகுதியை நோக்கி அதிக வேகத்தில் சென்ற
மோட்டார் சைக்கில் வீதியை கடக்க முயன்ற போது மோட்டார் சைக்கிளில்
மோதுண்டு பலத்த காயங்களுக்கு உள்ளான நபரை லிந்துளை வைத்தியசாலையில்
இருந்து நுவரெலியா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு சென்ற வேலையில் உயிர் இழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

சம்பவம் தொடர்பில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் தலவாகலை
பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளதாகவும் சம்பவத்தில் பலியான நபர் நானுஓயா பகுதியை சேர்ந்த 48வயதுடைய ஆறுமுகம் சுப்ரமணியம் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

கைது செய்யபட்ட சந்தேக நபரை 14.06.2019 வெள்ளிகிழமை நுவரெலியா மாவட்ட
நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்தபட உள்ளதாக தலவாகலை பொலிஸார்
தெரிவித்தனர். எனவே சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை தலவாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

இதேவேலை இடம்பெற்ற விபத்து தொடர்பான காணொளி தலவாகலை நகரில் உள்ள வரத்தக நிலையம் ஒன்றில் பொருத்தபட்டிருந்த சீ.சீ.டிவி கேமராவில்
பதிவாகியிருந்தமை குறிப்பிடதக்கது.

 

எஸ்.சதீஸ், க.கிஷாந்தன்

Leave a Reply

error: Content is protected !!