About Us

தமிழ்த்தேசியம் என்ற சிந்தனை மறந்து கருடன் தன் சிறகை விரிக்காது!

எல்லாவற்றுக்கும் விளம்பரம் என்ற ஒன்று தேவையாகியுள்ளது. எனினும் இது அப்படியல்ல ஊடகம் என்ற ஒரு விடயத்துக்குள் நுளையும்போது அதை கையாளும் தகுதி உரியவருக்கு உள்ளதா என்ற கேள்வி ஏற்படுவதுண்டு அந்த தகுதி எனக்கு உண்டு.
 
எனது ஊடக பயணம் இந்தியாவில் உதயமான ஈழம் என்ற ஒரு சஞ்சிகையில் முதன் முதலாக எண்பதுகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒரு கவிதையோடு ஆரம்பமாகி அது வீரகேசரி, சிந்தாமணி, தினகரன், சுட ஒளி மற்றும் உதயனுடன் முடிவுற்று பின்னர் வெவ்வேறு ஊடகங்களுக்கு தொழில்ரீதியாக செயற்பட வேண்டியதாயிற்று.
 
ஒடுக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்துக்காக குரல் கொடுக்கவே எனது பேனை அதிகமாக பயன்பட்டுள்ளது. ஏனெனில் நான் அடக்குமுறைக்கு உட்பட்ட ஒரு சமூகத்துக்குள் இருந்து வந்தவன், கவ்வாத்துக்கத்தியும், மீன்பிடி வலையும், வயற் பரப்பில் கிடந்த களப்பையும் எனது கைகளுக்குள் தழுவிச்சென்றவைதான்.
 
ஊடகத்துறையில் ஜாம்பவான்கள் என்று சொல்லப்பட்டவர்களான, சிவநாயகம், சிவகுருநாதன், ரட்ணசிங்கம், பின்னர் அருளானந்தம் மற்றும் வித்தியாதரன்வரை நான் கண்ட ஆசான்கள், எனது செய்திகள் தலைப்பாகிவிட்டால் அதில் வரும் சந்தோசம் எண்ணில் அடங்காதவை இப்படி இறுதியாக நாடாளுமன்ற செய்தியாளர்வரை எனது பயணம் தொடர்ந்தது.
 
எழுத்து துறைக்குள் மட்டும் அன்றி தமிழ்த்தேசிய போருக்குள்ளும் எனது வாழ்வின் ஒரு பகுதி விகுதியானது. அதனால் வந்த சிறைவாசங்களும் சித்திரைவதைகளும் எண்ணில் அடங்காதவை இப்படியாக கடந்து வந்த பாதையில் ஒரு மைல் கல் கருடன் செய்திகள்.
 
கருடன் செய்திகள் நடுநிலை கடந்து பயணிக்காது அது  தமிழ்த்தேசியம் என்ற ஒற்றுமைக்குள் ஒன்றியே பயணிக்கும்.
 
கால் நூற்றாண்டின் ஊடகப்பயணம் வெறும் அனுபவத்துடன் முடிந்து விடக்கூடாது என்ற எனது ஊடக நண்பர்களின் இடைவிடாத தூண்டுதலின் முடிவாக கருடன் சூரக் காற்றை நோக்கி தன் சிறகை விரித்திருக்கிறான் ஏனைய பறவைகளைப்போல காற்றும் மழைக்கும் அஞ்சி கருடன் கூட்டுக்குள் குந்திவிடுவதில்லை, அது சூரக்காற்றை கண்டு மகிழ்ந்து தனது சிறகில் சிலம்பம் விளையாடும்.
 
சவால்கள் நிறைந்த ஒரு பயணம்தான் அந்த பயணத்தில் வரும் தடைக்கற்களை படிக்கற்களாக ஆக்கி கொண்டு பயணம் தொடரும்.

 நன்றி
வரதன்.
error: Content is protected !!