கல்கரி வெள்ளமும் கொழும்பு பள்ளமும்…!

2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் திகதி கனடா நாட்டின் ஆல்பர்ட்டா மாகாணத்தின் வர்த்தக நகரான கல்கரி நகரம் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது. மாலை 4 மணி இருக்கும் பொலிஸ் வாகனங்கள் அங்குமிங்கும் சமிஞ்சை சத்ததுடன் ஓடி கொண்டிருந்தன. நானும் அதனை ரசித்து பார்த்து கொண்டிருந்தேன். ஆனால் அந்த ரசனை அடுத்த சில மணி நேரங்களுக்கு மாத்திரமே இருக்கும் என நான் நினைக்கவில்லை. நான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு முன்பாக பொலிஸ் வண்டியொன்று நின்றது....
Read More

மலையகப் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம்;எட்டாக்கனியா?

இலங்கையில் வாழக்கூடிய பல்லின சமூகத்தவர்களில் நாட்டின் பொருளாதாரத்தை தாங்கிப்பிடிக்கக்கூடிய முக்கிய பங்காளியாக காணப்படும் மலையகப் பெண்களின் வாழ்க்கை நிலையானது மிகவும் பின்தங்கிய நிலையிலே உள்ளது. தேயிலைத் தொழில்துறை, ஆடை கைத்தொழில், வெளிநாட்டு வேலை வாய்ப்பு என முத்துறைகளில் தடம் பதித்து உடலுழைப்பை நாட்டுக்காக வழங்குவோரின் வாழ்க்கை இன்னும் அவலங்கள் நிறைந்ததாகவே காணப்படுகின்றது. இரு சகாப்தங்களுக்கு மேல் இந்நாட்டில் வாழும் இப்பெண்களுக்கான அடிப்படை தேவைகள் கூட இன்னும் பூர்த்திசெய்யமுடியாத நிலையிலே உள்ளது. அடிப்படை உரிமைகள் இவை தான் என...
Read More

மலையகத்தை அச்சுறுத்தும் மது: தடைசெய்ய ஓரணியில் திரள அழைப்பு

மலையகத்தில் கடந்த காலப்பகுதியில் ஆங்காங்கே காணப்பட்ட மதுபாவணை நிலையங்கள் இன்று மக்கள் நடமாடும் பிரதான வீதிக்கருகில் மட்டுமல்லாது மூலை முடுக்கெல்லாம் மூலைத்துவிட்டது. வியாபார நோக்கில் அரசாங்கத்தால் கடந்த காலங்களில் மந்திரிகளுக்கு வழங்கப்பட்ட சாராய தவரணை அனுமதி பத்திரங்களை விற்பணை செய்து பலர் இன்று பார் முதலாளியாகிவிட்டனர். இவ்வாறாக மலையக பகுதிகளில் மூலை முடுக்கெல்லாம் ஆரம்பிக்கப்பக்டுள்ள மதுவிற்பணை நிலையங்களுக்கு அப்பால் நகரத்திலிருந்து சாதாரணமாக ஒன்றுக்கு அதிகமான கிலோமீற்றர் தூரத்தில் காணப்படும் தோட்டப்பகுதிகளிலும் சட்டவிரோதமாக மதுவிற்பனை இடங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கெல்லாம்...
Read More

மலையகத்தில் உயர் கல்வி கற்றோர் “நாசாவிலும் தொழில் புரிகின்றனர்! (மலையக கல்வி ஆய்வு கட்டுரை)

இலங்கையினை பொறுத்தமட்டில் தமிழ் மக்கள் வாழ்கின்ற ஒரு பகுதியாக மலைநாடு என்பது காணப்படுகின்றது. இலங்கையின் சனத்தொகையில் மலையக மக்கள் சுமார் 6 வீதமாக உள்ளனர். தற்போது மலையக பகுதி கல்வித் துறையில் வளர்ச்சியடைந்து வருகிறது. இலங்கையின் கல்வி வரலாறு பல தசாப்தங்களை கடந்துள்ளது. குறிப்பாக குருகுலக் கல்வி முதல் போர்த்துகேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் போன்ற வெளிநாட்டவர்கள் இலங்கையின் கல்வி வளர்ச்சிக்கு வழிகோலினார்கள். இந்த வகையில் மலையகத்தில் இன்று மலையகத்தில் உயர் கல்வி துறையானது வளர்ச்சி பெறுவதற்கு ஏதுவாய்...
Read More

டிக்கோயா வைத்தியசாலையின் வரலாறும் பாரதத் தலைவர்களின் மலையக விஜயமும்!

டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடத்தை எதிர்வரும் 12ஆம் திகதி பாரத பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார.; இவரை வரவேற்க எழில்கொஞ்சும் மலைநாடும் தயாராகிவருகின்றது. மலையகம்வாழ் தமிழ் மக்களுக்கும் , பாரததேசத்துக்குமிடையில் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. அதை தொப்புள்கொடி உறவு என கூறினாலும் மிகையாகாது. எனவே, மோடியின் வருகையைக்காண பலரும் வழிமீது விழிவைத்துக்காத்திருக்கின்றனர். இது ஒரு வரலாற்று- சரித்திர ரீதியான சம்பவமாகவே மக்கள் மத்தியில் பார்க்கப்படுகின்றது. இந்திய அரசின்...
Read More

குருதிசிந்திப்பெற்ற தொழிலாளர் உரிமையை புஷ்வாணமாக்க முதலாளிவர்க்கம் முயற்சி: 128 வருடங்கள் கடந்தும் அடக்குமுறை தொடர்கிறது!

“உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்னும் கோரிக்கைக் கோஷம் 130 ஆண்டுகளைத் தாண்டியும் உரத்துக் கேட்டுக்கொண்டே இருக்கின்றது. எட்டு மணிநேர வேலையை வென்றெடுத்து 128 ஆண்டுகள் ஓடி மறைகின்றன. எனினும், எத்தனை இடங்களில் இன்னமும் தொழிலாளர்கள் எட்டு மணித்தியாலங்களுக்கு மேலாகவும் வேலை வாங்கப்படுகிறார்கள். எமது குடாநாட்டில் பெண் தொழிலாளர்கள் கண்மூடித்தனமாக அவ்விதம் வேலை வாங்கப்படுவதுடன், வேதனங்களும் மிகக் குறைவாகவே வழங்கப்பட்டு வருவதொன்றும் புதுமை அல்ல. நாளொன்றுக்கு 18 மணி நேரங்களுக்கும் மேலாகத் தொழிலாளர்கள் மிருகத்தனமாக வேலை வாங்கப்பட்டதை எதிர்த்து...
Read More

மூன்றாம் உலகப் போர் வெடிக்குமா? கொதிக்கிறது கொரிய தீபகற்பம்

உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள விடயம்தான் அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்குமிடையில் மூண்டுள்ள போர் பதற்றம். எந்நேரத்திலும் இரண்டு நாடுகளுக்கிடையிலும் போர் வெடிக்கும் சூழல் கொரிய தீபகற்பத்தில் நிலவுகிறதால் உலகின் நான்கு முனைகளின் பார்வையும் வடக்கொரியாவையும், அமெரிக்காவையும் நோக்கியதாகவே 24 மணித்தியாலயமும் உள்ளது. உலக வல்லாதிக்கச் சக்தியான அமெரிக்காவுக்குச் சவால் விடும் வடகொரியாவின் செயற்பாடுகளுக்கு உலகில் பெருவாரியான நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தாலும், அமெரிக்காவுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்ற செய்தியை வடகொரியா கொடுத்த வண்ணம்தான் உள்ளது. வடகொரியாவின் ஆயுத வல்லமையைப் பறைசாற்றும்...
Read More

செத்த பிறகு செய்முறையென்றால் வாழ்க்கை எதற்கு? மீதொட்டமுல்ல பேரனர்த்தம் குறித்து ஒரு ஆய்வு!

மீதொட்டமுல்ல வான்பரப்பை துன்பமேகங்கள் முழுமையாகவே ஆக்கிரமித்துள்ளன. திரும்பும் திசையெல்லாம் துயரம் என்ற இடிமுழக்கத்தோடு கண்ணீர்மழையே பெய்கின்றது. நாலா புறத்திலிருந்தும் மரண ஓலங்கள் ஓங்கி ஒலித்தவண்ணமிருப்பதால் கொலன்னாவைப் பகுதியே மயானபூமியாக காட்சியளிக்கின்றது. உறவுகளையும், உடமைகளையும் இழந்துவிட்டு உயிரைமட்டுமே கையில் பிடித்தப்படி தப்பிவந்தவர்கள் தமது உறவுகளை தேடி அழையும் காட்சியானது பார்ப்பவர்களை கதறி அழவைக்கின்றது. குறிப்பாக குப்பை மேட்டுக்குள் இருந்து சடலங்களை தோண்டிஎடுக்கையில், ஐயோ அது தனது அம்மாவாக இருக்குமோ, அப்பாவாக இருக்குமோ, அக்காவாக இருக்குமோ என்ற மனப் பதற்றத்தில்...
Read More

மலையக அரசியல் வானில் உதயமான ஓர் சூரியன்!

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் பெ.சந்திரசேகரனின் 60ஆவது பிறந்ததினம் இன்றாகும். இதனையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகின்றது. மலையக மக்களின் பாரம்பரிய அரசியல் தொழிற்சங்க அமைப்பான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிலிருந்து விலகி 1989ஆம் ஆண்டு பெப்ரவரி 20ஆம் திகதி மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணி என்ற புதிய அரசியல் தொழிற்சங்க அமைப்பை உருவாக்கி மலையக சமூகத்தினருக்கு ஒரு புதிய அரசியல் தலைமைத்துவத்தைத் தந்த மலையக மக்கள் முன்னணியின் தலைவர் அமரர் பெ.சந்திரசேகரனின் 60ஆவது பிறந்ததினம்...
Read More
error: Content is protected !!