நுவரெலியாவில் பனிமூட்டம்: இயல்பு வாழ்க்கை முடக்கம்!

நுவரெலியா மாவட்டத்தில் 17.08.2017 அன்று இரவு முதல் தொடர்சியாக பெய்து வரும் தொடர் மழையினால் இப்பிரதேச மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கபட்டுள்ளது. இதேவேளை நுவரெலியாவில் இருந்து நானுஓயா ஊடாக அட்டன் செல்லும் பிரதான வீதியிலும், அட்டன் கொழும்பு பிரதான வீதியிலும், அதிகமான பனி மூட்டம் காணப்படுவதால் வாகன சாரதிகள் பல்வேறுப்பட்ட சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர். இந்நிலையில் நிரம்பியுள்ள பனிமூட்டத்தினால் வாகன சாரதிகள் தங்களின் வாகனங்களை மிக அவதானத்துடன் செயற்படுத்த வேண்டும் என்பதோடு, சாரதிகள் வாகனங்களில் மின்விளக்குகளை...
Read More

ரவியின் பதவி துறப்பு நல்லாட்சிக்குப் பலம்: விளக்குகிறார் வேலுகுமார்!

“எமது நாட்டில் நல்லாட்ச்சியை ஏற்படுத்துவதில் இன்னுமொரு மைல் கல்லாக ரவி கருணாநாயக்க வின் பதவி துறப்பு அமைந்திருக்கின்றது.” – தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார். பல்வேறு சவால்களின் மத்தியில் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அமைச்சர் ரவி கருணாநாயக்க வின் பதவி துறப்பு நல்லாட்ச்சியை ஏற்படுத்துவதில் இன்னுமொரு மைல் கல்லாக அமைந்திருக்கின்றது. 2015 ஆகஸ்ட் 17 ஆம் திகதி நல்லாட்சிக்கான ஆணையை மக்கள் பெற்றுக்கொடுத்தனர். இதன் போது...
Read More

சர்வதேச தலையீட்டை அனுமதியேன்: பதவியேற்ற கையோடு மாரப்பன சூளுரை!

இலங்கையின் நீதிக்கட்டமைப்பில் தலையிடுவதற்கு வெளிநாடுகளுக்கு அனுமதி வழங்கமாட்டார் என்று புதிய வெளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பன தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சின் வைத்து இன்று தனது கடமைகளை ஆரம்பித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை கூறினார். ‘ வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இலங்கை நீதிக்கட்டமைப்பில் தலையிடுவதற்கு அரசமைப்பில் இடமில்லை. அதற்கான ஏற்பாடுகளும் இல்லை. இது சர்வதேச சமூகத்துக்கும் தெரியும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்க இடமளிக்கமாட்டேன். உள்நாட்டு நீதிக்கட்டமைப்பில் தலையிடுவதற்கு வெளிநாடுகளும் விரும்பவில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

இ.தொ.காவை சந்திக்கிறது ஐ.ம.சு.மு: கூட்டணி அமைப்பது பற்றி பேச்சு!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீரவுக்குமிடையில் விரைவில் சந்திப்பு நடைபெறவுள்ளது என அறியமுடிகின்றது. உள்ளூராட்சிசபைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது சம்பந்தமாகவே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளுடன் தேர்தல் சம்பந்தமாக பேச்சு நடத்துமாறு அதன் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன்பிரகாரம் அவர்...
Read More

335 உள்ளூராட்சி சபைகளுக்கும் இவ்வருடத்தில் தேர்தல்: இறுதி முடிவெடுத்தது அரசு

மலையகம், வடக்கு,கிழக்கு உட்பட நாட்டிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்களை இவ்வருடத்துக்குள் நடத்துவதற்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக உயர்மட்டக்கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் ஜனாதிபதி, பிரதமர், மாகாணசபைகள், உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் மற்றும் தேர்தலுடன் தொடர்புடைய உயர்மட்ட அரச அதிகாரிகள் பங்கேற்றனர். இதன்போதே 23 மாநகரசபைகள், 41 நகர சபைகள், 271 பிரதேச சபைகள் என 335 உள்ளூராட்சி சபைகளுக்கும் புதிய முறையில் இவ்வருடத்துக்குள்...
Read More

கடற்படைத் தளபதியாகிறார் றியர் அட்மிரல் சின்னையா!

கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக, அடுத்தவாரம் நியமிக்கப்படவுள்ளார். இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன வரும் 22ஆம் நாளுடன் ஓய்வுபெறவுள்ளார். அதேவேளை, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான, ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவும், வரும் 21ஆம் நாளுடன் ஓய்வு பெறவுள்ளார். இந்தநிலையில், வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக றியர்...
Read More

சொற்போர்க்களமானது ஐ.தே.க. கூட்டம்: விஜயதாஷ பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் ரணிலிடம் ஒப்படைப்பு!

ஐக்கிய தேசியக்கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டமும், நாடாளுமன்றக்குழுக் கூட்டமும் கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்தவில் இன்று முற்பகல் நடைபெற்றது. இதன்போது காரசாரமான முறையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளதுடன், விஜயதாஷ ராஜபக்ஷவுக்கு எதிராக உறுப்பினர்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர். இதனால் சீற்றமடைந்த விஜயதாஷ, கட்சி உறுப்பினர்களுடன் சொற்போரில் ஈடுபட்டுள்ளார். இதனால், கூட்டம் சொற்போர்க்களமானது. சுமார் இரண்டரை மணிநேரம் இவ்வாறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதையடுத்து, விஜயதாஷவிடமிருந்து அமைச்சுப் பதவியை பறிப்பதா அல்லது அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதா என்பது குறித்து முடிவெடுக்கும்...
Read More

மனைவியின் நிர்வாணத்தை சந்தைப்படுத்திய கணவனுக்கு மறியல்!

தனது மனைவியின் நிர்வாணப் படங்களை கையடக்கத் தொலைபேசி மற்றும் முகநூல் ஆகியவற்றில் வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வெள்ளவாயா மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் 17-08-2017ல் நீதிபதி கேசர சமரதிவாகர முன்னிலையில், மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டு குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. புத்தலையில் உணவகமொன்றினை நடாத்தி வரும் நபரொருவர், தனது கையடக்கத் தொலைபேசி மூலம் பெறப்பட்ட தனது மனைவியின் நிர்வாணப்படங்கள் பலவற்றை, தமது நண்பர்களுக்கு கையடக்கத் தொலைபேசி...
Read More

பொதுத்தேர்தல் நடந்து ஈராண்டுகள்! மலையக எம்.பிக்கள் பெற்ற விருப்பு வாக்குகள் இதோ!!

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று இன்றுடன் ஈராண்டுகள் நிறைவடைகின்றன. ஜனாதிபதித் தேர்தல் 2015 ஜனவரி 8ஆம் திகதி நடத்தப்பட்டது. அதில் எதிரணியின் சார்பில் பொதுவேட்பாளராகக் களமிறங்கிய தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றார். அதன்பின்னர் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி 106 ஆசனங்களையும், சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 95 ஆசனங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆறு ஆசனங்களையும்,...
Read More
1 2 3 312
error: Content is protected !!