சாய்ந்தமருதில் கோர விபத்து; 3 ஆண்குழந்தைகள் பலி

அம்பாறை – கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று ஆண் குழந்தைகள் பலியாகியுள்ளனர். ஏனையோர் கல்முனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.   கொழும்பிலிருந்து பாலமுனை நோக்கி வந்த வேன் அக்கரைப்பற்று டிப்போ பஸ்ஸூடன் மோதுண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று காலை இடம்பெற்ற குறித்த விபத்தில்  மேலும் பெண்கள் உட்பட 10 இற்கும் மேற்பட்டோர் படுகாயம் காயமடைந்து கல்முனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாமென வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றனர்.    ...
Read More

பாலத்துக்கு உரிமை கோரி தொண்டா- திகா அணி மோதல்; ஹட்டனில் பதற்றம்

ஹட்டன் போடைஸ் பாலம் தமது கட்சியின் முயற்சியால்தான் அமைக்கப்பட்டது என இலங்கைத் தொழிலாளர் காங்கிர ஸுனதும், தேசிய தொழிலாளர் சங்கத்தின் ஆதரவாளர்களும் உரிமை கோரியதால் திறப்பு விழா நிகழ்வில் பதற்றநிலை உரு வாகியது.இதையடுத்துபொலிஸ்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஹட்டன் போடைஸ் வழியாக டயகம செல்லும் பிரதான வீதியின் போடைஸ் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி    சேதமாகிய பாலம் மத்திய மாகாண வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து அமைச்சின் 10 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டின் புனரமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழாவை...
Read More

ஆண்டானுக்கும் அடிமைக்குமிடையில் ஒருபோதும் சமத்துவம் வராது

பெரும்பான்மை இனத்திற்கும் பெரும்பான்மை மதத்துக்கும் பெரும்பான்மை மொழிக்கும் அடிமைப்பட்டு சேவகம் செய்வதுதான் தேசிய ஐக்கியம் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் தேசிய ஐக்கியம் என்ற போர்வையில் சிறுபான்மையினரின் உரிமைகளை விட்டுக்கொடுப்பதற்கு நாம் ஒருபோதும் தயாரில்லை” என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார். சாய்ந்தமருது  லீமெரிடியன் வரேவேற்பு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற தேசிய சகவாழ்வுக்கான இளைஞர் தலைமைத்துவ மாநாட்டில் பிரதம அதிதியாக...
Read More

மேற்குலக கலாசாரத்தை நாட்டுக்குள் திணிக்க சதி; ஓரினச் சேர்க்கைக்கு மஹிந்த எதிர்ப்பு

மேற்குலக கலாசாரங்களை நாட்டுக்குள் திணிப்பதற்கு முயற் சிகள் எடுக்கப்பட்டு வருகின்ற என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார். கெஸ்பெவ பகுதியில் இன்று மாலை நடைபெற்ற நிகழ் வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். “ ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பெறுவதற்காக நாட்டின் கலாசாரத்துக்கு ஒவ்வாத நிபந்தனைகளை ஏற்கக்கூடாது. ஆனால், மேற்குலக கலாசாரங்களை ஏற்பதற்கு இந்த அரசாங்கம் தயாராகிவிட்டது. இதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். ஆட்சியை கவிழ்ப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர். இதற்கு சிறந்த...
Read More

ட்ரம்புக்கு விழுந்தது முதல் அடி: தடை உத்தரவை தளர்த்தன நீதிமன்றங்கள்

  சிரியா, ஈரான் உள்ளிட்ட ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த உத்தரவின் படி வெளி நாட்டு பயணிகளை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றக் கூடாது என்று நிவ்யோர்க், வெர்ஜினியா மாகாண நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த 20 ஆம் திகதி   டிரம்ப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் உடனடியாக சிரியாவைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவில் நுழைய நிரந்தர தடை விதித்தும், ஈரான், இராக், லிபியா, ஏமன்,...
Read More

எமது கண்ணீருக்கு நீதி வேண்டும்; காணாமல்போனவர்களின் உறவினர்கள் அம்பாறையில் கதறல்

காணாமல்போனவர்கள் விவகாரத்தை கையாள்வதற்குரிய அலுவலகத்தை இலங்கை அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அம்பாறை- திருக்கோவிலில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. காணாமல்போனவர்களின் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், நல்லாட்சி அரசின் செயற்பாடுகளையும் கண்டித்தனர். அத்துடன், தமது கண்ணீருக்கு ஒரு தீர்வு அவசியம் என கோரி ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு மகஜர் கையளிப்பதற்குரிய நடவடிக்கையையும் முன்னெடுத்தனர். “ நல்லாட்சி அரசே எமது கண்ணீருக்கு பதில் சொல், ஐ.நா.வுக்கு வழங்கிய உறுதிமொழிகளை...
Read More

ஆட்டோவுக்குள் `செக்ஸில்’ ஈடுபட்ட பெண்ணுக்கு 50 ரூபாவே அபராதம்; பதுளை நீதிமன்றம் தீர்ப்பு

பொதுஇடத்தில் ஆட்டோவில் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தலா ஐம்மது ரூபா வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நிர்வாணகோலத்தில் ஆட்டோவுக்குள் இருந்த குறித்த நபர்களை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸாரே கைதுசெய்துள்ளனர். பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் பதில் நீதிபதி சரத் வீரசிங்க முன்னிலைவில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். பதுளையைச் சேர்ந்த ஆணொருவரும், ஹாலி எலையைச் சேர்ந்த பெண்ணொருவருமே, பதுளைபிட்டியாவுக்கு செல்லும் வழியில் ஆட்டோவொன்றில் நிர்வானமாக இருந்தனர். மேற்படி விதிக்கப்பட்ட நூறுரூபா அபராதம் குறித்து, பொலிசாரிடம் வினவியபோது, பழைய சட்ட...
Read More

ஊவாவில் தமிழ்ப் படுகொலை; மாகாணசபையின் கவனத்துக்கு கொண்டுவந்தார் ருத்திரதீபன்

ஊவா மாகாணத்தில் தமிழ், சிங்கள மக்கள் எத்தகைய பேதமின்றி நல்லினக்கத்துடன் வாழ்ந்து வந்த போதிலும், தமிழ் மொழி அமுலாக்களில் முற்றுமுழுதாக புறக்கணிப்புக்கள் மற்றும் பாகுபாடுகள் காட்டப்படுவது மிகவும் வேதனையளிக்கின்றது. அத்துடன், அரச துறைகளில் மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் கடமைகளிலிருந்தும், இந்நிலை நீடிப்பது குறித்து, மாகாண முதலமைச்சர் அதி கூடிய கவனம் செலுத்த வேண்டுமென்று, ஊவா மாகாண சபை உறுப்பினர் வே. ருத்திரதீபன் குறிப்பிட்டார். ஊவா மாகாண சபையின் மாதாந்த அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்....
Read More

பெண்களுக்குரிய மலசலக்கூடத்தில் ஆண்களுக்கு இடம்: பதுளையில் தமிழுக்கு நடக்கும் கொடூரம் ( ஆதாரம் இணைப்பு)

தமிழ் மொழியும் அரச மொழியாக அங்கீகாரம் பெற்றுள்ள நிலையில், அந்த மொழிப் பாவனை உரிய வகையில் இடம்பெறுவதில்லையென்றே தெரியவருகிறது. நாட்டின் பல பாகங்களிலும் தமிழ்க் கொலைகள் இடம்பெறும் வகையில் அரச அறிவிப்புகளும், பொது அறிவிப்புகளும் காணப்படுகின்றன என்பது கவலைக்குரிய விடயமாகும். அந்தவகையில் அ பதுளை அரசினர் பொது மருத்துவமனை மலசலகூடத்திற்கு முன்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அறிவிப்பு பலகையில் சிங்களம் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் ‘பெண்கள் மலசலகூடம்’ என்று குறிக்கப்பட்ட போதிலும், தமிழ் மொழியில் ‘ஆண்கள் மலசலகூடம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது....
Read More
error: Content is protected !!