ஆட்டம்காண்கிறது அரசு: கூட்டத்தை பிற்போட்டார் மைத்திரி!

முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக, ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் நேற்று நடத்தவிருந்த கூட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரெனப் பிற்போட்டுள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பேச்சு நடத்தவிருந்தார். மிக முக்கியமான விவகாரங்கள் பல இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவிருந்தன. எனினும், இந்தக் கூட்டத்தை வரும் திங்கட்கிழமைக்கு அவர்; பிற்போட்டுள்ளார். டிசெம்பர் மாதம் 31ஆம் நாளுக்குப் பின்னர், தனித்து ஆட்சியமைக்க ஐக்கிய தேசிய முன்னணி தயாராகி வருகிறது என்று சில...
Read More

மஹிந்தவுக்கு ஆப்பு வைக்க தயாராகிறது அரசு: ட்ரயல் அட்பார் முறையில் விசாரணை!

மஹிந்த ஆட்சியின்போது இடம்பெற்ற பாரிய ஊழல்,மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக மேல்நீதிமன்றத்தில் ‘ட்ரையல் அட்பார்’ முறையில் விசாரணை நடத்துவதற்கு அமைச்சரவையில் இணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரான அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்துவெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியவை வருமாறு, ‘விசேட நீதிமன்றத்தை அமைப்பதென்பதும், தற்போதுள்ள நீதிமன்றக் கட்டமைப்பை பலப்படுத்துவதென்பது இரண்டுவிடயங்களாகும்....
Read More

457.37 ஹெக்டேயார் முழுமையாக அழிவு: சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு நிவாரணம்

வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஆகியவற்றால் பாதிப்புக்கு உள்ளான சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு சலுகை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2017ம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக காலி, இரத்தினபுரி, மாத்தறை, அம்பாந்தோட்டை, களுத்துறை, கொழும்பு மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களின் 457.37 ஹெக்டேயார் பயிர் செய்கை நிலங்கள் முழுமையாக 1,823.10 ஹெக்டேயார் பயிர் செய்கை நிலங்கள் பகுதி அளவிலும் பாதிக்கப்பட்டது. அவ்வாறு பாதிப்படைந்துள்ள தேயிலை...
Read More

இந்துக்கலாசார மண்டபத்தின் செயற்பாடுகள் முடக்கம்: பதுளையில் தொடர்கிறது சோகம் (நேரடி ரிப்போட்)

பதுளை சைவ பரிபாலன சங்கத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணியில் 130 * 20 அடிகளைக் கொண்ட மாடிக்கட்டிடமொன்று, பதுளை இந்துக்கலாசார மண்டபமென்ற பெயரில் இயங்கிய போதிலும், இந்துக்கலாசார விடயங்கள் எதுவும் அங்கு இடம்பெறுவதில்லை. உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, இங்கு பெரும் குறைபாடாக இருந்து வருகின்றது. அனைத்து குறைபாடுகளும் நீங்கப்பெற்று, இவ் இந்து கலாசார மண்டபம் இந்து மக்கள் மயப்படுத்தப்படல் வேண்டுமென்பதே, பதுளை வாழ் இந்து மக்களின் ஏகோபித்த கோரிக்கையாகும். 110 வருடங்களை எட்டியுள்ள பதுளை சைவ...
Read More

தேயிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தில் திருத்தம்

1958ஆம் ஆண்டு 02ஆம் இலக்க தேயிலை, இறப்பர் மற்றும் தென்னந் தோட்டங்கள் (திட்டக் கட்டுப்பாடு) சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பல்வேறு பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்காக தேயிலை, இறப்பர் மற்றும் தென்னந் தோட்டங்களை பயன்படுத்தும் போது நம்பகத்தன்மை காணப்படுவது காலத்தின் தேவையாகும். அதனடிப்டையில், வணிக நடவடிக்கைகளுக்காக, தென்னை தோட்டங்களை பிரித்தல் அல்லது ஒரு தனியான பிரிவாக வழங்குவதற்கான வரையறையினை 05 ஏக்கர்களாகவும் (02 ஹெக்டேயார்), தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களை பிரித்தல் அல்லது ஒரு...
Read More

மஹிந்தவின் மனைவியும் மகனும் விசாரணைப் பொறிக்குள் சிக்கினர்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷpராந்தி ராஜபக்ஷ குற்ற புலனாய்வு விசாரணை பிரிவிலும் , அவரது மகன் ரோஹித ராஜபக்ஷ பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிலும் இன்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். வசீம் தாஜுதீன் கொலை தொடர்பான விசாரணைக்காக ஷpராந்தியும், சீனாவின் உதவியுடன் ஏவப்பட்ட சுப்ரீம் செட் – 1 செய் தொடர்பிலான விசாரணைக்காக ரோஹிதவும் அழைக்கப்பட்டிருந்தனர். கடந்த ஆட்சியின்போது செஞ்சிலுவை சங்கத்தால் சிரிலிய அமைப்பிற்கு வழங்கப்பட்ட டிபென்டர் வாகனத்தின் வர்ணத்தை மாற்றியமைத்து யோசிதவின் பயன்பாட்டுக்கு...
Read More

அரச படிவங்களை முமொழியிலும் மொழிபெயர்க்கும் பணி ஆரம்பம்!

அரசாங்க படிவங்கள் மும்மொழியில் மொழிபெயர்க்கும் பணியின் முதலாம் கட்ட நிகழ்வு தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களது தலைமையில் அமைச்சில் நடைபெற்றது.

மலையக மக்கள் சார்பாக அமைச்சர் ராதா இந்திய சுதந்திர தின வாழ்த்து!

இந்தியாவிற்கு சுகந்திரம் கிடைத்தினாலயே இலங்கைக்கும் சுதந்திரம் கிடைத்தது இந்தியாவிற்கு எனதும் மலைய மக்களினதும் 70 வது சுதந்திர தின வாழ்த்துக்கள் என கூறுகின்றார் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தவைவருமான் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள். தொடர்து அவரது வாழத்து செய்தியில் எமது அண்டைய சகோதரத்துவ நாடான இந்தியா தனது 70 வது சுகந்தினத்தை எமது மக்களோடு இரண்டர கலந்து கொண்டாடும் இவ்வேலையில் பாரத பிரதமரையும் பாரத ஜனாதிபதியையும் மக்களையும்...
Read More

வெளிவிவகார அமைச்சரானார் மாரப்பன!

புதிய வெளிவிவகார அமைச்சராக திலக்மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று முற்பகல் அவர் பதவிப்பிரமானம் செய்துகொண்டார். பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றிய அனுபவமும் இவருக்கு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. வெளிவிவகார அமைச்சராக செயற்பட்ட ரவி கருணாநாயக்க தனது பதவியை கடந்த வியாழக்கிழமை இராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினரான திலக்மாரப்பன, ரணில் விக்கிரமசிங்கவுக்கு மிகவும் நெருக்கமானவர்களுள் ஒருவராவார்.
error: Content is protected !!