நீதியமைச்சர் பதவியை பறிகொடுத்தார் விஜேதாச!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய அவரது பதவி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் அமைச்சர் விஜயதாசவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறி செயற்பட்டதாக விஜயதாச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் அமைச்சரவைப் பொறுப்புக்களை வகிக்கத் தகுதியற்றவர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. அதற்கமைய அவர் வகிக்கும் அனைத்து அமைச்சுப் பதவிகளில் இருந்தும் அவரை நீக்குமாறு ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின்...
Read More

நானுஓயாவில் கசிப்பு தயாரித்த இடம் சுற்றிவளைப்பு; கசிப்பு கொள்கலன்களுடன் ஒருவர் கைது!

கடந்த 22ம் திகதி நானுஓயா பொலிஸ் பிரிவுற்கு உட்பட்ட பிரதேசத்தில் சட்டவிரோதமாக விற்கப்படும் கசிப்பு தயாரித்த ஒருவரை நானுஓயா பொலிஸ் அதிகாரி பிரியந்த அமரசேகர அவரின் வேண்டுகோளுக்கமைய பதில் பொலிஸ் அதிகாரி அபேசேகர உட்பட குழுவினரால் சுற்றி வளைக்கப்பட்டு 18ஆயிரம் மில்லி லீட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மனித உடலை கொஞ்சம் கொஞ்சமாக சிதறடிக்கும் மதுவுக்கு அடிமையானவர்கள் எண்ணற்றவர்கள் அதிகம். எத்தனை ஊடகங்கள் எத்தனை விளம்பரங்கள் இவற்றின்...
Read More

நுவரெலியா மாவட்ட உள்ளுராட்சி சபைகளை அதிகரிக்க அரசு பச்சைக்கொடி; அமைச்சர் மனோ தெரிவிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற எண்ணிக்கையை கூட்டுவதற்கான தமிழ் முற்போக்கு கூட்டணியின் போராட்டம் வெற்றி அடைந்துள்ளது. சற்று முன் உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் அவரது அமைச்சில் நாம் நடத்திய சந்திப்பின் போது இதற்கான உடன்பாடு ஏற்பட்டது. இன்று காலை நாடு திரும்பிய தன்னிடம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கையை ஏற்று பிரதேச சபைகளின் எண்ணிக்கையை கூட்டும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அறிவுறுத்தியதாக அமைச்சர் பைசர் முஸ்தபா எம்மிடம் தெரிவித்தார்....
Read More

மஸ்கெலியாவில் காணாமற்போன ஆட்டோ” பலாங்கொடையில் மீட்பு; மூவர் கைது!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்கந்த தோட்டத்தில் வீடிற்கருகில் நிறுத்திருந்தபோது காணாமல் போன முச்சக்கரவண்டி பலாங்கொட பிரதேசத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர் பலாங்கொடை கல்தொட்ட பிரதேசத்திலிருந்து 22.08.2017 மாலை முச்சக்கரவண்டியை மீட்டதுடன் கடத்தல் சம்பவத்துக்கு பயன் படுத்தப்பட்ட மற்றொரு முச்சக்கரவண்டியையும் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரையும் கைது செய்துள்ளனர் கடந்த 18 ம் திகதி தனது வீட்டிற்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி காணாமல் போயுள்ளதாக மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைத்த முறைபாட்டையடுத்து பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுட்ட நிலையிலே காணாமல்...
Read More

விற்பனைக்காக எடுத்து செல்லப்பட்ட ஒரு தொகை கஞ்சாவுடன்; இருவர் நோட்டன் பிரிட்ஜ் பொலிசாரிடம் சிக்கினர்!

எம்பிலிபிட்டியவிலிருந்து அட்டன் நோக்கி வந்த இலங்கை போக்குவரத்து பஸ்ஸை 22.08.2017 மாலை கினிகத்தேன தியகல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு சோதனையின் போது பொதி செய்யப்பட்ட 250 கிராம் கஞ்சா பக்கட்டுகள் இரண்டுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நோட்டன் பிரிட்ஜ் இரகசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் யூ.ஜீ.ஆர்.எம்.உடுகம தலைமையில் மேற்கொள்ப்பட்ட சுறிவளைப்பில் கினிகத்தேன மற்றும் எம்பிலிபிட்டிய செவனகல பிதேசத்தை சேர்ந்த இருவரை கைது செய்யப்பட்டனர் கொண்டுவரப்பட்ட 500...
Read More

தமிழை வாசிக்க தமிழர்களுக்கு, என்னால் கண்ணாடி கொடுக்க முடியாது; சபையில் அமைச்சர் மனோ கணேசன்!

நாடு முழுக்க இருக்கக் கூடிய எல்லா பெயர்ப் பலகைகளும் மூன்று மொழிகளிலும் தெளிவாக, எழுத்து பிழையியில்லாமல் இருக்க வேண்டும். சிங்களத்திலே பெரிதாக எழுதிவிட்டு, தமிழிலே சிறிதாக எழுத முடியாது. அப்படி எழுதப்படுமானால் தமிழர்களுக்கு மாத்திரம் நான் கண்ணாடி கொடுக்க வேண்டி வரும். அப்படி வழங்க முடியாது. அதற்கான சந்தர்ப்பம் கிடையாது நாடு முழுக்க சிங்களமும், தமிழும் சமமான ஆட்சி மொழிகள். ஆகவே அரசாங்க பெயர் பலகைகள் எழுதும் போது, வடக்கு, கிழக்கில் தமிழ், சிங்களம்,ஆங்கிலம் என்ற வரிசை...
Read More

கொட்டகலை விநாயகர் ஆலயத்தில் ஆறுமுகனின் உபய பூஜை!

கொட்டகலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலத்தின் வருடாந்த தேர் திருவிழா இடம்பெற்று வருகின்றது. இன்றைய தினம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபய பூஜை இடம்பெற்றது. இப்பூசை வழிப்பாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர் பலரும் கலந்துக்கொண்டனர். கொட்டகலை தவராஜ்

மலையக பெண்களின் அரசியல் பங்களிப்பை அதிகரிக்க விழிப்புணர்வு கருத்தரங்கு!

பிரிடோ நிறுவன ஏற்பாட்டில் மலையக பெண்கள் மத்தியில் அரசியல் பங்களிப்பினை அதிகரிக்கும் பொருட்டு அக்கரப்பத்தனை கல்மதுரை முன்பள்ளி மண்டபத்தில் முன்பள்ளி ஆசிரியை செல்வி எம் யோகபிரியா தலைமையில் 21.08.2017 அன்று விசேட கருத்தரங்கு நடைபெற்றது. இதில் 50 இற்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர் இக்கருத்தரங்கில் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய உதவி அதிகாரி ராஜகுரு மற்றும் சிரேஷட திட்ட இணைப்பாளர் கே.புஸ்பராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். படப்பிடிப்பு அக்கரப்பத்தனை நிருபர்

மலையக தொழிலாளர் முன்னணியின் மாவட்ட தலைவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி!

மலையகத்தின் பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான மலையக மக்கள் முன்னணியின் தொழிற் சங்கமான மலையக தொழிலாளர் முன்னணியின் மாவட்ட தலைவர்கள் 35 பேருக்கான தலைமைத்துவ பயிற்சிகள் கொழும்பு “அபேகம” வளாகத்தில் (22) நடைபெற்றது. மலையத்தில் தற்போது மீள் எழுச்சி பெற்று வரும் மலையக தொழிலாளர் முன்னணியின் ஒரு அபிவிருத்தி செயற்பாடாக மாவட்ட தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிகள் வழங்கபட்டு வருகின்றது. பொதுவாக மாவட்ட தலைவர்களுக்கு தொழிலாளர்கள் மத்தியிலும் சமூகத்தின் மத்தியிலும் மாவட்ட தலைவர்கள் சிறந்த தலைமைத்துவ பாங்குடன் செயற்பட...
Read More
1 2 3 275
error: Content is protected !!