பரிசளிப்பு நிகழ்வு

தொலஸ்பாகே, பரணகல தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ வேலுகுமார் ,பிரதம விருந்திருந்தினராக கலந்ததுகொண்டார். வெற்றிபெற்ற அகிக்கு வெற்றிக் கிண்ணத்தையும் வழங்கி வைத்தார்.

என் வாழ்க்கையில் சந்தித்த மிக பெரிய தோல்வி தென்னாபிரிக்காவிடம் தோற்றதே! : மேத்யூஸ்

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமாக இழந்துள்ள நிலையில் இது குறித்து இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் இகருத்துத் தெரிவிக்கையில்; “என் கிரிக்கெட் வாழ்க்கையில் எவ்வளவோ தோல்விகளை நான் பார்த்துள்ளேன். ஆனால் அணியின் தலைவராக இதுதான் மிக பெரிய தோல்வியாக கருதுகிறேன். எந்தவொரு ஆடுகளத்தில் விளையாடும் நோக்கத்தோடு தான் நாங்கள் இலங்கையில் பயிற்சி எடுத்தோம் மற்றும் பவுன்சர் பந்துகளை எதிர்கொள்ளவும் சிறப்பு...
Read More

முடிவை மாற்றிக் கொண்ட சனத் ஜயசூரிய!

தன் மீது மேற்கொள்ளப்படுகின்ற சில அழுத்தங்கள் மற்றும் சில தீர்க்கப்படாத பிரச்சினைகள் காரணமாக கிரிக்கட் தெரிவுக் குழு தலைவர் பதவியில் இருந்து சனத் ஜயசுரிய விலக தீர்மானித்திருந்த நிலையில் அவர் தனது முடிவை மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் இடம்பெற்ற கலந்துறையாடலின் பின்னரே அவரின் முடிவில் மாற்றம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சில பிரச்சினைகள் காரணமாக தனது பணிகளை உரிய முறையில் முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும் இதன் காரணமாகவே தான் இராஜினாமா செய்ய தீர்மானித்தாகவும்...
Read More

இலங்கைக்கு மற்றுமோர் மேத்யூஸ் உதயம்!

இலங்கையில் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான பள்ளி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் மித்ரா தெனுவரா என்ற சிறுவன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். மித்ரா தெனுவரா என்ற சிறுவன் களுத்துறை, திசா சென்ரல் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது சகலதுறை ஆட்டத்தை பார்த்து இலங்கை அணிக்கு மற்றொரு மேத்யூஸ் கிடைத்துவிட்டார் என்று அனைவரும் வாயார பாராட்டி வருகின்றனர். 3 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்திய மித்ரா, துடுப்பாட்டத்தில் 111 ஓட்டங்களையும் குவித்தார். களுத்துறை வித்தியாலய அணிக்கு எதிரான போட்டியில்...
Read More

தலைவர் பதவியில் இருந்து ஏ.பி.டி.வில்லியர்ஸ் விலகல்!

தென்னாபிரிக்க டெஸ்ட் கிரிக்கட் அணியின் தலைவர் பதவியில் இருந்து ஏ.பி.டி.வில்லியர்ஸ் விலகியுள்ளார். அத்துடன் அவர் இலங்கை அணியுடனான மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் இருந்தும் விலகியுள்ளார். காயம் காரணமாக அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஃபப் டு ப்ளசி அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க கிரிக்க சபை இதனை உறுதிப்படுத்தி உள்ளதோடு; ஃபப் டு ப்ளசியின் நியமனம் நிலையானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரபாத் சணியின் பந்துவீச்சுப் பாணி குறித்து முறைப்பாடு!

மேற்கிந்தியத் தீவுகளின் கெவோன் கூப்பர், பங்களாதேஷின் அரபாத் சணி ஆகியோரின் பந்துவீச்சுப் பாணி குறித்து, பங்களாதேஷ் பிறீமியர் லீக் நடுவர்களால் ஐசிசி இடம் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிம்பாப்பே மற்றும் இலங்கை அணிகள் இன்று மோதுகின்றது!

இலங்கை மற்றும் சிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச போட்டி இன்று(21) இடம்பெறவுள்ளது. இந்த போட்டி சிம்பாப்பே அணி வெற்றி பெறவேண்டிய கட்டாயமான போட்டியாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோற்றது இலங்கை அணி!

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை, ஜிம்பாப்வே,மேற்கிந்திய தீவுகள் ஆகிய 3 அணிகள் ஜிம்பாப்வேயில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்று(16) நடந்த போட்டியில் இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகள் விளையாடியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் உபுல்...
Read More

இலங்கை கிரிக்கெட் நிறுவன ஒப்பந்தத்தில் கையெழுத்திட 17 வீரர்கள் இணக்கம்!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட 17 வீரர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். அணித் தலைவர் மெத்தியூஸ், தினேஸ் சந்திமால், ரங்கன ஹேரத், குஷல் ஜனித் பெரேரா மற்றும் லஹிரு திரிமன்ன உள்ளிட்ட வீரர்களே இவ்வாறு இணக்கம் தெரிவித்துள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. முன்னதாக குறித்த ஒப்பந்தத்தில் அணியின் வீரர்களுக்கு வழங்கப்பட்ட சில சலுகைகள் குறைக்கப்பட்டிருந்ததாகவும் மேலும் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
error: Content is protected !!