அணித் தலைமைப் பதவி லஹிரு திரிமன்னவிற்கு!

மேற்கிந்திய தீவுகள் ஏ அணியுடன் இடம்பெறவுள்ள மூன்றாவதும் இறுதியுமான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியின் இலங்கை ஏ அணியின் தலைமைப் பதவி லஹிரு திரிமன்னவிற்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த இந்தப் போட்டித் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அணித் தலைவராக செயற்பட்ட திமுத் கருணாரட்ன இந்த போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் , நிரோஷன் திக்வெல்ல , விமுக்தி பெரேரா , பிரபாத் ஜயசூரிய மற்றும் லஹிரு குமார ஆகியோரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்....
Read More

கிரிக்கெட் வீரர் ரமித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப்பத்திரம் ரத்து!

கொழும்பு, கறுவாத்தோட்டம் பகுதியில், கடந்த வியாழன்(22) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் ரமித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக பறிமுதல் செய்யுமாறு போக்குவரத்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

‘சாமுவேல்ஸுக்கு மரியாதை என்பதே தெரியாது’! – ஸ்டோக்ஸ்

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சகலதுறை வீரர் மார்லன் சாமுவேல்ஸ், மரியாதை தெரியாத ஒருவர் என, இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற டெஸ்ட் போட்டியொன்றில், இருவருக்குமிடையிலான வாய்த்தர்க்கம் இடம்பெற்றதோடு, அதன் போது சாமுவேல்ஸ் ஆட்டமிழந்த பின்னர், அவருக்கு சல்யூட் தெரிவித்து, ஸ்டோக்ஸ் விடை வழங்கியிருந்தார். பின்னர், இவ்வாண்டு இடம்பெற்ற உலக இருபதுக்கு-20 தொடரின் இறுதிப் போட்டியில் இருவரும் வாய்த்தர்க்கம் புரிந்திருந்தனர். ஆனால், அப்போட்டியில் 85 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்ற சாமுவேல்ஸ்,...
Read More

தினேஷ் சந்திமாலுக்கு அவசர சத்திரசிகிச்சை!

இலங்கை கிரிக்கெட் வீரர் தினேஷ் சந்திமாலுக்கு அவசர சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று(17) மெர்க்கன்டைல் கிரிக்கெட் போட்டியின் போது உபாதைக்கு உள்ளாகியமையினால் அவசராமக தனியார் வைத்தியசாலை ஒன்றில் குறித்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மேலும் தெரியவருகிறது. அவரது வலக்கையின் விரலிலேயே குறித்த உபாதை ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் ஸ்டார்க்!

அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிற்சல் ஸ்டார்க், கணைக்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிட்னியில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியின் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அவரது இடது கணைக்காலில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. பயிற்சியின் போது, பயிற்சி உபகரணமொன்றுடன் அவர் மோதியுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்தே அவருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தென்னாபிரிக்க அணிக்கெதிராக இடம்பெறவுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது....
Read More

தொடரினை வென்றது அவுஸ்திரேலிய அணி!

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான, இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், கொழும்பு ஆர் பிரேம்தாஸ மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா, தொடரை 2-0 என்ற ரீதியில் கைப்பற்றியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், தனஞ்சய டி சில்வா 62(50) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், ஜேம்ஸ் போக்னர், அடம் ஸாம்பா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களையும் ஜோன்...
Read More

பந்து நெஞ்சில் பாய்ந்ததில் சந்திமாளுக்கு இன்று பரிசோதனை!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்றைய தினம்(21) இடம்பெற்ற நிலையில், இரவு ஆட்டத்தின் போது பந்து நெஞ்சில் தாக்கியதால் தினேஷ் சந்திமால் உபாதைக்கு ஆளாகியிருந்தார். குறித்த உபாதையானது உயிராபத்து அற்றது என இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், முழுமையான பாதுகாப்பு கருதி இன்றையதினம் காலை MRI ஸ்கேன் பரிசோதனைக்கு சந்திமால் தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 56 புள்ளிகளை பெற்றிருந்த நிலையில்,...
Read More

இலங்கை அணி வென்றும் முரளி பரிசளிப்பின்போது பங்கேற்கவில்லை!

முரளி – வோன் கிண்ணம் ஊடாக நடைபெறும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் இறுதி ஆட்ட நாளாக நேற்றைய தினம்(17) அமைந்திருந்தது. குறித்த நேற்றையதின ஆட்டத்தில் இலங்கை அணியினர் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என பெற்று வெற்றிவாகையினை சூடியிருந்தனர். நேற்றையதின போட்டியின் பரிசளிப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவராக முத்தையா முரளிதரன் பெயர் குறிப்பிட்டிருந்தும், இறுதியில் அவரால் கலந்து கொள்ள முடியாதென தகவல் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. முரளிக்கு இவ்வாறு முன்கூட்டியே அழைப்பு விடுத்திருந்த...
Read More

இலங்கை அணி வீரர் தனஞ்சய டி சில்வா சதம் அடித்தார்!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இறுதி டெஸ்ட் போட்டியில் தனஞ்சய டி சில்வா சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து 05 விக்கட்டுக்களை இழந்து தடுமாறியது. எனினும் தனஞ்ச டி சில்வா மற்றும் சந்திமால் ஆகியோர் இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்து அணிக்கு நம்பிக்கை சேர்த்தனர். தொடர்ந்து களத்தில் ஆட்டமிழக்காதிருக்கும் தனஞ்ச டி சில்வா சற்று முன்னர் வரை 104 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 56 ஓட்டங்களையும்...
Read More
error: Content is protected !!