வலது குறைந்தோருக்கு நுவரெலியாவில் மருத்துவமுகாம்; அத்தியாவசிய உபகரணங்கள் வழங்கி வைப்பு!

டீ பீல்ட் நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட அதிகாரி தர்மேந்திரராஜ் ஏற்பாட்டில் ஐரோப்பியன் யூனியன் மற்றும் சயில்ட் பண்ட் ஸ்ரீலங்கா ஆகியன இணைந்து நுவரெலியா பிரதேச செயலகத்தினூடாக நுவரெலியா பிரதேசத்தில் 22 கிராம சேவகர் பிரிவுகளைச் உள்ளடக்கிய வலது குறைந்த பிள்ளைகள் மற்றும் ஏனையோர்களுக்கு நடாத்தப்பட்ட இலவச மருத்துவ முகாமில் வைத்தியர்களால் இனங்காணப்பட்ட 92 பேருக்கு மூக்கு மூக்கு கண்ணாடிகள் மற்றும் சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன. மேலும் இக்குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் முகமாக தெரிவு செய்யப்பட்ட 6...
Read More

மலையகத்தில் காலநிலை சீர்கேடு; மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நிலவி வரும் கடும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு, இடர்முகாமைத்துவ திணைக்களம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, குகுல கங்கையின் வான் கதவு திறக்கப்படவுள்ளதாகவும் அதனை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு, இடர்முகாமைத்துவ திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது மஸ்கெலியா – நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் ஹப்புகஸ்தென்ன பகுதியில் இன்று விடியற்காலை பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததன் காரணமாக அவ்வீதியினூடான போக்குவரத்து சில மணிநேரம் தடைப்பட்டிருந்ததாக...
Read More

பொகவந்தலாவ பெற்றோசோ தோட்டத்தில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு பேர் கைது!

காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் பெற்றோசோ டெவன் போல் காட்டுப்பகுதியில் சட்டவிரோத மாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 6 பேரை பொகவந்தலாவ பொலிஸார் 18.08.2017. சனிகிழமை அதிகாலை கைது செய்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.சி.தர்மபிரிய தலைமையில் நேற்று இரவு முன்னெடுக்கபட்ட சுற்றிவளைப்பின் போது இந்த 06பேரும் கைது செய்யபட்டதாக தெரிவிக்கப்பட்டது. கைது செய்யபட்டவர்களிடம் மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்த பட்ட ஒரு சில உபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது...
Read More

ஹுலந்தலாவை தோட்டத்தில் புதிய வீடுகள் கையளிப்பு; பிரதமர் உறுதி பத்திரங்களை வழங்கினார்!

நமுனுகல பெருந்தோட்ட கம்பனியின் ஹுலந்தாவ தோட்டத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் நிர்மானிக்கப்பட்ட 25 வீடுகளும் வீடுகளுக்கான காணி உரித்துகளும் கையளிக்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, சாகல ரத்நாயக்க, மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை, மற்றும் தென் மாகாணசபை உறுப்பினர்கள்...
Read More

அவிசாவளையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் அந்த இடத்திலேயே பலி!

அவிசாவளை உக்குவத்தை சந்தியில் நேற்று (17.08.2018) நிகழ்ந்த பேருந்து – மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானார். உக்குவத்தை சந்தியில் பாதை மின்விளக்கு சமிக்ஞையின் போது நிறுத்தப்பட்டு, பின் புறப்படுகின்றபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பேருந்து சாரதியின் கவனயீனமே இந்த விபத்துக்கு காரணமென விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். அவிசாவளை பொலிசார் பஸ் சாரதியை கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ஆர்.கமலதாஸ்

லிந்துல்ல மெரேயா தோட்டத்தில் 25 வீடுகளுக்கு அடிக்கல்!

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரத்தின் பணிப்புரைக்கு அமைய லிந்துல மெரேயா தோட்டத்தில் 25 தனி வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் லிந்துல பிரதேச அமைப்பாளர் வீ. சிவானந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சோ. ஸ்ரீதரன், சிங். பொன்னையா, அம்பகமுவ பிரதேச சபை முன்னாள் தலைவர் ஜீ. நகுலேஸ்வரன், நுவரெலியா பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்...
Read More

சமூக வலயத்தளங்கில் எழுதுவதால் மலையகத்தை மாற்ற இயலாது; களத்தில் இறங்கவேண்டும் ஊவா- மா. உ . ருத்திர தீபன்!

மலையக அரசியல் தலைவர்களையும்,மலையக அரசியல் கலாசாரத்தையும் முழுமையாக வெறுத்தொதுக்கும் நிலையில் எமது இளைஞர் யுவதிகள் தள்ளப்பட்டிருப்பது நமது சமூக மாற்றத்திற்கு ஆரோக்கியமானதல்ல என்று ஊவா மாகாண சபை உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் நிர்வாக செயலாளருமான வேலாயுதம் ருத்திர தீபன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்… சமூக வலைத்தளங்களிலும் இளைஞர் யுவதிகளின் மனதிலும் இன்றைய மலையக அரசியல் என்பது சாக்கடையாக்கப்பட்டுள்ளது.இதற்கு சமூகத்தின் நிலைப்பாடும் மக்களின் பொருளாதாரமுமே காரணமாக அமைந்தாலும் நம்முடைய எண்ணப்பாடும் ஒரு வகையில்...
Read More

இ.தொ.கா – ஜப்பானிய சர்வதேச தொழில் ஸ்தாபனம் இடையே கலந்துரையாடல்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸிக்கும் ஜப்பானிய சர்வதேச தொழில் ஸ்தாபனத்திற்குமிடையில் (JILAF) நேற்று (18.08.2017) சௌமிய பவனில் கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போதுஇ இ.தொ.கா சார்பில் அதன் நிர்வாக உப தலைவரும், சட்டத்தரணியமான கா.மாரிமுத்து, ஊவா மாகாணசபை அமைச்சர் செந்தில் தொண்டமான், இ.தொ.கா உப தலைவர் கருப்பையா கணேசமூர்த்தி, இ.தொ.கா சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாளர் ரவி சந்திரசேகர, உப தலைவர்களான பி.சிவராஜா, திருமதி.அனுஷியா சிவராஜா, ஜப்பானிய சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் சார்பில் யூக்கி ஒட்சுஜி, லக்ஷ்மன் சாஹி...
Read More

பதுளையில் ஹோட்டல் உரிமையாளர் கொலை: மகன் கைது!

பதுளை ‘டுவரிஸ்ட் இன்’ விடுதி உரிமையாளர், கொலை செய்யப்பட்டமை குறித்து கொலைச் சந்தேக நபர்களாக கொலையுண்டவரின் மகன் மற்றும் ‘டுவரிஸ்ட் இன்’ விடுதி ஊழியர் ஒருவருமாக, இருவரை பதுளைப் பொலிசாரினால் (இன்று) 18-08-2017ல் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளை ‘டுவரிஸ்ட் இன்’ விடுதி உரிமையாளரான சிரிபால விக்கிரமரட்ன கடந்த 2ந் திகதி அதிகாலை கழுத்து நெறிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருந்தார். இம் மரணம் குறித்து, பதுளை மஜிஸ்ரேட் நீதிபதி ஸ்தல விசாரணைகளை மேற்கொண்டதன் பேரிலும், சட்ட வைத்திய அதிகாரியின் சட்ட...
Read More
1 2 3 336
error: Content is protected !!