மலையக மக்களின் சம்பள போராட்டத்திற்கு இலங்கை கல்விச்சமூக சம்மேளனம் ஆதரவு; செயலாளர் சங்கரமணிவண்ணன் !

மலையக மக்களின் சம்பள உயர்வு போராட்டத்துக்கு பூரண ஆதரவு வழங்குவதாக இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆர் . சங்கர மணிவண்ணன் தெரிவித்துள்ளார் . கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடந்த மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாள் சம்பளம் வழங்குமாறு கோரி தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களும் பேச்சுவார்த்தைகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர். இதன் பின் கொண்டு வரப்பட்ட இந்த புதிய ஒப்பந்தமானது கம்பனிக்காரர்கள் தொழிலாளர்களுக்கு எதிராகச் செய்த சதியின் விளைவாகவே அமைந்திருந்தது. இந்நிலையில் இதுவரை தமக்கு...
Read More

அட்டன் – போடைஸ் தோட்டத்தில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்! (photos)

  அட்டன் – போடைஸ் தோட்ட 3 பிரிவுகளை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் 08.11.2016 அன்று தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர். இவ் ஆர்ப்பாட்டத்தில் அத் தோட்ட தொழிலாளர்கள் தினமும் கொய்யும் தேயிலை கொழுந்தினை நிறுவை இட தோட்ட நிர்வாகத்தால் கொண்டு வரப்பட்டுள்ள நவீன முறையிலான தராசு நிறுவையை முறையாக காட்டுவதில்லை என்பதினை ஆட்சேபித்து முறையாக நிறுவையை காட்டும் தராசு ஒன்றினை பெற்றுத் தரும்படி நிர்வாகத்தை வழியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர். இவ் போராட்டம் போடைஸ்...
Read More

ஓல்டன் தோட்ட பாதை திறந்து வைத்தார் திலகர் எம்.பி!

சாமிமலை   ஓல்டன்  தோட்ட உள்ளக பாதை செபப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக   தொழிலாளர்தேசிய சங்கத்தின் பிரதி பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம்   திலகராஜ் திறந்து வைத்தார். தனது பன்முகப்படுத்தப்பட்ட மூன்று லட்சம் ருபாய் நிதியில்  செப்பனிடப்பட்ட பாதை திறப்பு விழாவில் மத்திய  மாகாணசபைஉறுப்பினர் ஸ்ரீதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்.

கருடனின் செய்தியை மஞ்சள் பத்திரிகை என விமர்சித்த அமைச்சர் மனோவின் கருத்துக்கு; வந்த பகிரங்க மடல்!

ஊடகவியலாளர் ஒருவரின் அமைச்சர் மனோ கணேசனுக்கான பகிரங்க மடல்! மதிப்பிற்குரிய அமைச்சர் மனோ கணேசன் அவர்களே, இராஜாங்க கல்வி அமைச்சர் இராதாகிருஸ்ணன் தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகவுள்ளதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் மனோ கணேசன் வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்க வேண்டியும், சில விடயங்களை முன்வைக்கவுமே இந்தப் பகிரங்க கடிதத்தை எழுதுகிறேன். “குறைபாடுகளை சொல்லுங்கள், காது கொடுத்துக் கேட்கிறோம்” என தாங்கள் (அமைச்சர் மனோ) குறிப்பிட்டுள்ளீர்கள். அத்துடன், மஞ்சள் பத்திரிகை, சிறுபிள்ளையின் கையில் கிடைத்த விளையாட்டு பொருளாக...
Read More

மஸ்கெலியா சூரியகந்த தோட்டத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய்; சவூதி முகாமில் மர்ம மரணம்!

  இலங்கையிலிருந்து மத்தியகிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக தொழில் தேடி செல்லும் மலையக பெண்கள் பலரை அந்நாடுகளில் உள்ள தடை முகாம்களில் வைக்கப்பட்டு சித்தரவதைக்கும் உள்ளாக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் இருந்து பணிப்பெண்களாக சென்றுள்ள 80ற்கும் மேற்பட்ட பெண்கள் தடை முகாம்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தகவல் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அட்டன் – மஸ்கெலியா ஸ்டெர்ஸ்பி சூரியகந்த (லேட்புரூக்) தோட்டத்தில் இருந்து 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பழனியாண்டி கற்பகவள்ளி என்ற...
Read More

மல்லியப்பு சந்தியில் அமைச்சர் திகாவின் பதாதைக்கு சேதம் விளைவித்த விஷமிகள் !

  அட்டன் காவற்த்துறைக்குட்பட்ட அட்டன் மல்லியப்பு பகுதியில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரின் பெயர்விளம்பர பலகை இரண்டு இனந்தெரியாதவர்களால் 06.11.2016 அன்று இரவு கிழிக்கப்பட்டுள்ளதாக நகரத்திற்கு பொறுப்பான அட்டன் காவற்த்துறையினருக்கு மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் அறிவித்துள்ளார்.   இவ்வாறு கிழிக்கப்பட்ட விளம்பர பலகையில் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன் மற்றும் எம்.உதயகுமார் அவர்களினதும் உருவப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.   எனவே இது...
Read More

நுவரெலியா கல்வி வலயத்தில் மூன்றாம் தவணைக்கான வினாத்தாள் கால தாமதம்; மாணவர்கள் விசனம் !

பாடசாலை மாணவர்களுக்கு காலை 11.30 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டதாக ஆசிரியர்களும், மாணவர்களும், குற்றச்சாட்டு நுவரெலியாக கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் மூன்றாம் தவணை பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு இன்று காலை 11.30 மணியளவில் வினாத்தாள் வழங்கப்பட்டதாக மாணவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். மத்திய மாகாண கல்வி திணைக்களத்தினால் மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை பரீட்சைகாக வினாத்தாள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. அந்த வினாத்தாள் ஆண்டிறுதி பரீட்சைக்கான முதலாவது பரீட்சை இந்து சமயம் பாடத்திற்கான வினாத்தாள் இன்றும் இடம்பெற்றுள்ளது...
Read More

“மாஸ்டர் மைன்ட்” போட்டியில் தலவாக்கலை தமிழ் வித்தியாலயம் சாதனை !

2016 ஆண்டிற்கான “மாஸ்டர் மைன்ட் கொம்படிஷன்” (Master Mind Competition)  கிண்ணத்தை தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் தட்டிச் சென்றுள்ளது. அட்டன் ஜோன் பொஸ்கோ கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பொன்றினால் 2013 ஆம் ஆண்டு முதல் மாணவர்களின் பொது அறிவு திறனை பரீட்சித்துப் பார்ப்பதற்காக இப்போட்டியானது வருடாந்தம் நடாத்தப்பட்டு வருகிறது. இவ்வருடம் இப்போட்டியானது 05-11-2016 அன்று அட்டன்  ஜொன் பொஸ்கோ கல்லூரியில் நடைபெற்றது . இதில் நுவரெலியா, அட்டன் கல்வி வலயங்களிலிருந்து 20 பாடசாலைகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு...
Read More

எமக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை; “கருடன் செய்திக்கு அமைச்சர் ராதா விளக்கம் !

கருத்து வேறுபாடுகள் என்பது குடும்பத்துக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறது அதை பெரிதுபடுத்த முடியாது அதற்காக பிரிந்து போவது என்பதல்ல குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொண்டு பயணிக்க வேண்டும் என அமைச்சர் ராதாகிருஷ்ணன் “கருடனில் வெளிவந்த கூட்டணியில் அமைச்சர் ராதா அதிருப்தி என்ற செய்தி தொடர்பாக தனது கருத்தை வெளியிட்டார் . தமிழ் முற்போக்கு கூட்டணி மூன்று பிரதான கடசிகளால் உருவானது எனவே கருத்து வேறுபாடுகள் இல்லாமல் இருக்க முடியாது, அதை தவிர்த்து கொண்டு சேவையாற்றுவோம், நான் இந்த கூட்டணியை...
Read More
error: Content is protected !!