ஹாலி-எல முருகன் கோவிலில் கொள்ளை: இருவர் கைது!

இந்து ஆலயமொன்றின் புனரமைப்பு வேலைகளுக்காக கட்டப்பட்ட களஞ்சியசாலை உடைக்கப்பட்டு பல இலட்சம் ரூபா பெறுமதியான தரை ஓடுகள் மற்றும் சீமந்து உள்ளிட்ட பெறுமதிமிக்க பொருட்களை திருடிய நபர்களை, ஹாலி-எலைப் பொலிசார் 18-08-2017ல் பகல் கைது செய்துள்ளனர். ஹாலி-எலைப் பகுதியின் டொட்லன்ஸ் பெருந்தோட்ட முருகன் ஆலயத்திலேயே 17-08-2017ல் இரவு, மேற்படித் திருட்டு இடம்பெற்றுள்ளது. இத்திருட்டு குறித்து, ஹாலி-எலைப் பொலிஸ் நிலையத்தில் செய்யபடப்ட புகாரையடுத்து விரைந்த பொலிசார், மேற்கொண்ட தீவிரப் புலனாய்வு பேரில், அதே தோட்டத்தைச் சேர்ந்த இருவரைக் கைது...
Read More

அலங்கார உற்சவ நகர்வல தேர்த்திருவிழா

அப்புத்தளை சைவ இளைஞர் மன்ற ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய சதூர்த்தி அலங்கார உற்சவ நகர்வல தேர்த்திருவிழா, எதிர்வரும் 24ஆம் திகதி விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகி, 26ஆம் திகதி பிராயச்சித்த அபிஷேகம் மற்றும் மகேஸ்வர பூஜையுடன் நிறைவு பெறும். 24ஆம் திகதி விநாயக வழிபாடு, கணபதி ஹோமம் ஆகியன இடம்பெற்று, 25ஆம் திகதி அலங்கரிக்கப்பட்ட சித்திரத்தேரில் ஸ்ரீ விநாயகப் பெருமான் எழுந்தருளிய அப்புத்தளை நகர் பவனி வலம், 26ந் திகதி பிராயச்சித்த அபிஷேகம் மற்றும் மகேஸ்வர பூஜை...
Read More

ஹட்டனில் நாளை அடிக்கல்நாட்டும் விழா: திகா பங்கேற்பு!

மலையக புதிய கிராமங்கள் இ உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பணிப்புரைக்கேற்ப அட்டன் செண்பகவத்தை தோட்டம் மற்றும் டிக்கோயா தோட்டம் ஆகியவற்றில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய வீடமைப்புத்திட்ட கிராமங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் 19.8.2017 சனிக்கிழமை அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம் பெறவுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார். இதற்கேற்ப 50 வீடுகளைக் கொண்ட செண்பகவத்தை தோட்ட வீடமைப்புத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு...
Read More

அட்டன் பிரதேசத்தில் அட்டக் குப்பைப் பிரச்சினைக்கு முடிவுகட்ட நடவடிக்கை!

அட்டன் பிரதேசத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள கழிவுகள் பிரச்சினைகளை தீர்வு காணுவது தொடர்பாக இதனுடன் தொடர்புபட்டுள்ள பல்வேறு அமைச்சுகளின் அதிகாரிகள் அட்டன் பிரதேசத்திலுள்ள பல்வேறு பிரதேசங்களுக்கு விஜயம் செய்து நிரந்தர தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுக்க முயற்சி எடுத்து வருகின்றனர். இந்த விஜயத்தின் போது பெருந்தோட்ட அமைச்சின் அதிகாரிகள், கட்டிட நிர்மாண திணைக்களத்தின் அதிகாரிகள், நுவரெலியா மாவட்ட செயலகத்தின் அதிகாரிகள், உள்ளுராட்சி திணைக்கள அதிகாரிகள், சூழல் பாதுகாப்பு அதிகாரிகள், இடர் முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகள் ஆகியோர் இந்த மேற்பார்வை நிகழ்வில்...
Read More

அட்டனில் மற்றுமொரு சுற்றிவளைப்பு: போதை மாத்திரை மற்றும் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

விற்பனைக்காக வைத்திருந்த கேரள கஞ்சா ஒரு தொகையுடன் போதை மாத்திரைகளும் வைத்திருந்த ஒருவரை அட்டன் கலால் திணைக்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அட்டன் பிரதேசத்தில் போதை பொருள் விற்பனை செய்பவர் சந்தேகிக்கப்படும் மேற்படி நபரிடம் பொதி செய்யப்பட்ட 15 கேரள கஞ்சா பக்கட்டுகளுன் போதை மாத்திரைகள் ஒருத்தொகையும் அட்டன் நகரில் 17.08.2017 மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டதாவும் சந்தேக நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து 18.08.2017 அட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும்...
Read More

பத்து அடி உயரத்துக்கு வளர்ந்த அதிசய கோவா” அட்டனில் ஆச்சர்யம்!

பத்து அடி உயரத்துக்கு கோவா செடியொன்று அட்டன் குடாகம பிரதேசத்தில் வளர்ந்துள்ளது. அதிசயிக்கும் வகையில் வளர்ந்திருக்கும் இலை கோவா செடியானது 6 மாத காலத்தில் இவ்வாறு உயரமாக வளர்ந்துள்ளதாக வீட்டுத்தோட்டத்தில் உரிமையாளர் குமாரி திசாநாயக தெரிவித்தார். சமைப்பதற்காக நுவரெலியாவிலிருந்து கொண்டு வந்த இலை கோவாவின் ஒரு கிளையை வீட்டுத்தோட்டத்தில் நாட்டி வைத்து பசுவின் சானம் உரமாக இட்டு வளர்த்த இந்த கோவா செடியிலிருந்து கிடைக்கும் இலை கோவாவை வீட்டு சமையலுக்கும் அயலவர்களுக்கும் வழங்குவதுடன் இலை கோவா 1...
Read More

கொத்மலை நீரேந்தில் 70 ஆயிரம் மீன் குஞ்சுகள் இடப்பட்டன; மாகாண அமைச்சர் ரமேஷ் கலந்துகொண்டார்!

மத்திய மாகாண அமைச்சர் ராமேஸ்வரனின் வழிகாட்டலின் கீழ் நுவரெலியா மாவட்டத்திலே நன்னீர் மீன்பிடி துறையை ஊக்குவிக்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுவருகின்றது. மீன் உணவு உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்கில் நீர்த்தேக்கங்கள், குளங்கள் ஆகியவற்றில் புதிதாக மீன் குஞ்சுகளை இடப்பட்டுவருகின்றன. அந்த வகையில் 17.8.2017 கொத்மலை சொய்சி பகுதில் மகாவலி நீர்த்தேக்கத்தில் 70000 மீன் குஞ்சுகள் இடப்பட்டன . இந் நிகழ்வில் விவசாய அமைச்சின் உத்தியோகத்தர்கள் இ பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டதை இங்கு காணலாம். தலவாக்கலை கேதீஸ்

இறுதிக்கால கொடுப்பனவை பெறாமலேயே இறக்கும் தொழிலாளர்; உடனடியாக வழங்க இதொகா வலியுறுத்து!

மக்கள் தோட்ட அபிவிருத்திச்சபை, ஸ்ரீலங்கா பெருந்தோட்டயாக்கம், எல்கடுவ பிளான்டேசன் தோட்டங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள கொடுப்பனவுகளை துரிதகதியில் காலம் தாழ்த்தாது வழங்கப்பட வேண்டும். தேசிய ஆலோசனைசபைக் கூட்டத்தில் சட்டத்தரணி கா.மாரிமுத்து வலியுறுத்து. தோட்டத் தொழிலாளர்களின் சேவைகாலப்பணம், ஊழியர் சேமலாபநிதி மற்றும் ஊழியர் நம்பிக்கைநிதி ஆகியன கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மக்கள் தோட்ட அபிவிருத்திச்சபை, ஸ்ரீலங்கா பெருந்தோட்ட யாக்கம், எல்கடுவ பிளான்டேசன் நிர்வகிக்கும் அனைத்து தோட்டங்களில் வதியும் தொழிலாளர்களுக்கு இதுவரையிலும் வழங்கப்படவில்லை. நாம் பலமுறை இதைப்பற்றி...
Read More

கடந்த ஆட்சியில் மலையகத்துக்கு பாகுபாடு: சாடுகிறார் சிறிதரன்!

முன்னைய அரசாங்கங்களில் அபிவிருத்தித் திட்டங்களில் பாராபட்சம் காட்டப்பட்ட தோட்டங்களிலும் தற்போது முறையான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு அமைச்சர் திகாம்பரம் உரிய பணிப்புரைகளை வழங்கியுள்ளார் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார். மலையக புதிய கிராமங்கள் இ உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பணிப்புரைக்கேற்ப 22 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் கொட்டகலை பொரஸ்ட்கிறிக் தோட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 16.8.2017 புதன்கிழமை...
Read More
error: Content is protected !!