கொட்டகலையில் சிறுவர் கழகங்களின் வருடாந்த ஒன்று கூடல்!

வேல்ட் விஷன் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற நுவரெலியா பிராந்திய சிறுவர் கழகங்களின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு இன்று 16.08.2017 கொட்டகலையில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற சிறுவர்கழகங்களின் முக்கியஸ்தர்கள் தத்தமது பிரதேசத்தில் தாம் எதிர்நோக்குகின்ற உட்கட்டமைப்பு வசதிகளின் குறைபாடுகள் , கல்விப்பிரச்சினைகள் , பொதுப்பிரச்சினைகள் தொடர்பான கருத்துக்களை முன்வைத்தனர். இந்த நிகழ்வில் மக்களின் பிரதிநிதியாக மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் , நுவரெலியா கல்வி வலயப்பணிப்பாளர் , மேலதிக கல்விப்பணிப்பாளர் , பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரிகள் ,...
Read More

தலவாக்கலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

தலவாக்கலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட திவ்சிறி பகுதியில் 63வயதுடைய முதியவர் ஒருவரின் சடலம் ஒன்று 16.08.2017 புதன் கிழமை மாலை 05 மணி அளவில் காட்டு பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த முதியவர் வசித்து வரும் வீட்டுக்கு அண்மித்த பகுதியில் உள்ள காட்டு பகுதியிலே இவரின் சடலம் மீட்கப்பட்டது. சுகயீனமுற்று இருந்த நிலையில் இவர் காணாமல் போனதாகவும் பின்னர் அவரை அவரது உறவினர்கள் தேடியபோதே காட்டுப்பகுதியில் சடலமாக கிடந்தார் என விசாரணைகளில் தெரியவருகிறது. பிச்சமுத்து தங்கவேல்...
Read More

மட்டு. கைதி மொனராகலையில் தப்பியோட்டம்!

சிறைக் கைதியொருவர், சிறைச்சாலை மதில் மீதேறி தப்பிச் சென்றுள்ள சம்பவமொன்று, மொனராகலை சிறைச்சாலையில் 16-08-2017ல் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு பகுதியின் செங்கலடியைச் சேர்ந்த நபரொருவரை, சிறைச்சாலையிலிருந்து தப்பிச்சென்றுள்ளவராவார். இந்நபர் கொலைக்குற்றச்சாட்டொன்றின் பேரில், சிறை வாசம் அனுபவித்து வந்தவராவார். இந்நபர் தப்பிச் செல்ல உதவிய சிறைக்காவலர் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க, மொனராகலை சிறைச்சாலை நிருவாகம் ஏற்பாடுகளை செய்து வருகின்றது. அத்துடன் மொனராகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சேகித்த தேசப்பிரிய தலைமையிலான குழுவினர், கைதி தப்பியோடியமை குறித்து தீவிர புலன்...
Read More

மலையகத்தில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக; இதொகா இளைஞர் அணி களமிறங்குகிறது!

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகள் மற்றுமின்றி மலையக நகர் மற்றும் கிராமப்பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனைகளும் , பாவனைகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கப்படுகின்றது .இது தொடர்பில் இ.தொ.கா இளைஞர் அணி பிரிவுக்கு பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் அரசியல் வாதிகளா? அல்லது இளம் சமூகத்தை வீணடிக்க திட்டமிட்டு வரும் அரசியல்வாதிகளின் ஆதரவைக் கொண்ட வியாபாரிகளா? என்ற கேள்வியும் பொதுமக்களால் எழுப்பப்பட்டுள்ளது. அதேவேளையில் போதை பொருள் பாவனையிலிருந்து மலையகத்தையும் இளம் சமூகத்தினரையும் காத்திட இலங்கை தொழிலாளர் காங்கிரசின்...
Read More

டி லீப் விஸனின் வருடாந்த வியாபார சந்தை!

ஆங்கில கல்வி அறிவில் பின் தங்கியுள்ள மலையக மாணவர்களுக்காக பிரத்தியேகமாக மஸ்கெலியாவில் இயங்கி வரும் ஆங்கில பாடசாலை தான் Tea Leave Vision. குறித்த தனியார் ஆங்கில பாடசாலையின் முக்கிய நிகழ்வாக, இளைஞர்கள் மத்தியில் சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் வியாபார சந்தை இந்த வருடமும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் மஸ்கெலியா, அட்டன், நல்லத்தண்ணி, பொகவந்தலாவை,நோர்வுட் போன்ற பகுதிகளை சேர்ந்த பொது மக்களும் கலந்துக்கொண்டிருந்தனர். இந்தநிலையில் அங்கு பிரத்தியேகமாக வாடிக்கையாளர்களை கருவம் வகையில் ஏற்பாடு...
Read More

சீன புகைப்பட கண்காட்சி நுவரெலியாவில்!

இலங்கை, சீனா ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான அரசியல் நட்புறவின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை சீன தூதுவரின் ஏற்பாட்டில் இரு நாடுகளின் அரசியல் நல்லுறவை உறுத்திப்படுத்தும் விசேட புகைப்படக் கண்காட்சியொன்று நுவரெலியா வாசிகசாலையில் 14ம்,15ம் திகதிகளில் இடம்பெற்றது. இக்கண்காட்சி நுவரெலியா மாநகரசபையின் முன்னாள் தலைவர் மஹிந்த தொடம்பேகமவால் ஆரம்பிக்கப்பட்டதோடு பாடசாலை மாணவர்கள்,வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்,சீன நாட்டு பிரஜைகள் மற்றும் பொதுமக்கள் என பலர் இப்புகைப்பட கண்காட்சிளை பார்வையிட்டனர். திருகேதீஸ்வரன்

அட்டன் வர்த்தக நிலையத்தில் திருடியவர் நாவலப்பிட்டியில் சிக்கினார்; சிசிடிவி காட்டிக்கொடுத்தது!

அட்டனில் பிரபல வர்த்தக நிலையமொன்றில் பின்புறமுள்ள கதவை உடைத்து திருடிய நபர் சிசிடிவியின் கமெராவில் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை அட்டன் நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் உள்ளிட்ட மேற்படி நபர் அந்த வர்த்தக நிலையத்தில் பெறுமதியான பொருட்களை திருடி சென்றமை தெரிந்ததே. இந்த திருட்டு சம்பவத்தை விசாரணைக்கு உட்படுத்திய பொலிஸார் இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரொருவர் நாவலப்பிட்டி பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார். மேற்படி நபரே அட்டன் வர்த்தக நிலையத்தில் திருட்டு...
Read More

மாத்தறை வாழ் மக்களுக்கும் திகா நேசக்கரம்: 18 இல் 25 வீடுகள் கையளிப்பு

‘பசுமை பூமி’ புதிய கிராமங்கள் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் வழிகாட்டலில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதிஒதுக்கீட்;டில் மாத்தறை மாவட்டம் ஹூலந்தாவ தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 25 தனி வீடுகளை கொண்ட புதிய கிராமம் மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கும் நிகழ்வு 18-08-2017 அன்று இடம்பெறவுள்ளது. இவ்விசேட நிகழ்வானது பிரதம ரணில் விக்ரமசிங்க தலைமையில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர்; பழனி திகாம்பரம், காணி...
Read More

பெருந்தோட்டத்தொழில்துறை கண்ணியமானது: ருத்திரதீபன் எடுத்துக்காட்டு

கண்ணியமானதும், கௌரவமிக்கதுமான தொழில் நடைமுறைகளை பெருந்தோட்டத் தொழில்துறையில் ஊக்குவிக்கும் வகையிலேயே, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் முன்னெடுப்புக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றனவென்று, சங்கத்தின் நிருவாகச் செயலாளரும், ஊவா மாகாண சபை உறுப்பினருமான வேலாயுதம் ருத்திரதீபன் குறிப்பிட்டார். இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம், தேசிய தொழிற்சங்க சம்மேளனம் ஆகியவற்றுடன் இணைந்து, தொழிலாளர் கல்வி மேம்பாடுகள் குறித்த செயலமர்வு, 16-08-2017ல் பதுளை ‘ரிவர்சைட்’ விடுதியில் நடைபெற்றபோது, அச்செயலமர்வில் கலந்துகொண்ட ஊவா மாகாண சபை உறுப்பினருமான வேலாயுதம்...
Read More
error: Content is protected !!