தேவாங்கு போல் இருப்பதாகத் திட்டினார் சுவாதி – ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம்!

சென்னை – இன்போசிஸ் பெண் பொறியியலாளர் சுவாதியைக் கொலை செய்ததாக நம்பப்படும் ராம்குமார், தற்போது உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காவல்துறையின் விசாரணையில் சுவாதியைக் கொலை செய்ததன் காரணம் என்னவென்று ராம்குமார் கூறியிருப்பதாவது:- “நான் ஆலங்குளம் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் இன்ஜினீயரிங் படித்தேன். படிக்கும்போதே பேஸ்புக் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்தனர். அப்படி தான் சுவாதியும் எனக்கு அறிமுகம் ஆனார்.” “பின்னர் வாட்ஸ்அப் மூலம் அவருடன் தொடர்பு கொண்டேன். அடிக்கடி அவருக்கு வாட்ஸ்அப்...
Read More

டாக்கா பயங்கரவாதத் தாக்குதல் முடிவுக்கு வந்தது!

டாக்கா – வங்காளதேசத்தின் உள்நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு டாக்காவில் உள்ள ஓர் உயர்தர உணவகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் – அதைத் தொடர்ந்த பிணை பிடிப்பு சம்பவங்கள் – ஆகியவை ஒருமுடிவுக்கு வந்துள்ளன. இந்த உணவகம் ஸ்பெயின் நாட்டு உணவு வகைகளுக்கான உணவகமாகும். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரு பயங்கரவாதி உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளான். மேலும் இருவர் இன்னும் அங்கே இருக்கிறார்களா அல்லது அடையாளம் காணப்பட்டுள்ளார்களா என்பது தெரியவில்லை....
Read More

டாக்கா தாக்குதல்: இரு இலங்கையர்கள் உட்பட பிணைக்கைதிகளில் 12 பேர் மீட்பு!

டாக்கா – வங்காளதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல் கய்டா தீவிரவாதக் குழுக்கள் நடத்திய தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. உணவகத்தினுள் தீவிரவாதிகளின் பிடியில் பலர் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போதைய தகவலின் படி, 1. இதுவரை 12 பேர் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. 2. அவர்களில் இலங்கையைச் சேர்ந்த இருவர் மீட்கப்பட்டு விட்டதாக இலங்கை வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. 3. உணவகத்தின் உள்ளே கொடூரமாகக் கொல்லப்பட்டவர்களின் புகைப்படங்களை...
Read More

41 பேர் பலி – 239 பேர் காயம் : இஸ்தான்புல் விமான நிலையத்தின் ஒரு பகுதி மீண்டும் திறக்கப்பட்டது!

இஸ்தான்புல் – புதன்கிழமை அதிகாலை மும்முனைகளில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட இஸ்தான்புல் நகரின் அதாதுர்க் விமான நிலையத்தின் ஒரு பகுதி இன்று மீண்டும் சேவைகளுக்காக திறக்கப்பட்டது. குண்டுவெடிப்பில் இதுவரை 41 பேர் பலியாகியுள்ளனர். 239 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 109 பேர் சிகிச்சைகளுக்குப் பின்னர் மருத்துவமனைகளில் இருந்து இல்லம் திரும்பினர். இறந்தவர்களில் 13 பேர் வெளிநாட்டவர்களாவர்.

இஸ்தான்புல் விமான நிலையத்தில் பயங்கரவாதத் தாக்குதல்! 36 பேர் பலி! 147 பேர் படுகாயம்!

இஸ்தான்புல்: துருக்கிய நேரப்படி புதன்கிழமை காலை இந்த பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. படுகாயம் அடைந்தவர்களில் 6 பேர் மோசமான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். 3 பேர் கொண்ட தற்கொலைப் படையினர் இந்தத் தாக்குதலை நடத்தினர். மூவரும் உயிரிழந்துள்ளனர். தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் பின்னணியில் ஐஎஸ் இயக்கம் இருக்கலாம் என சந்தேகிப்பதாக துருக்கியப் பிரதமர் தெரிவித்துள்ளார். விமான நிலையத்திலிருந்து நூற்றுக்கணக்கானோர் பீதியோடும், அலறலோடும், காயங்களோடு, விமான நிலையத்தை விட்ட வேகம் வேகமாக ஓடி வெளியேறினர்....
Read More

பேஸ்புக்கில் தனது உருவமாற்ற படம்: அவமானத்தால் இளம் பெண் தற்கொலை!

சென்னை – பேஸ்புக்கில் தனது மார்பிங் செய்யப்பட்ட படத்தைப் பார்த்த வினுபிரியா (வயது 22) என்ற பெண் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, சென்னை நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் சுவாதி என்ற பொறியியலாளர் வெட்டிக் கொல்லப்பட்ட செய்தியும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள் கொலை செய்யப்பட்ட செய்தியும் நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த வேளையில், வினுபிரியாவின் தற்கொலை பொதுமக்கள் மத்தியில் மீண்டும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம்...
Read More

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் எண்ணெய் கசிவு – பெரும் விபத்து தவிர்ப்பு!

சிங்கப்பூர் – எண்ணெய் கசிவு காரணமாக, இன்று காலை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சாங்கி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட போது ஓடுபாதையில் விமானத்தில் தீப்பற்றியுள்ளது. எனினும், அதிருஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை அதிகாலை 2.05 மணியளவில், சாங்கி விமான நிலையத்தில் இருந்து, எஸ்க்யூ368 என்ற விமானம் இத்தாலியின் மிலன் நகரை நோக்கிச் சென்றுள்ளது. அப்போது பயணிகளில் ஒருவரான லீ பீ யீ (வயது 43) என்பவர், வாயுக் கசிவு போன்ற நெடியை...
Read More

இன்போசிஸ் நிறுவனத்தின் பெண் பொறியியலாளர் இரயில் நிலையத்தில் வெட்டிக் கொலை! சென்னையில் பரபரப்பு!

சென்னை – ஒரு பொது இடமான சென்னை  நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில், கணினிப் பொறியியலாளர் பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையை உலுக்கியுள்ளது. சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சந்தான கோபால கிருஷ்ணன் என்பவரின் 24 வயது மகள் சுவாதிதான் (படம்) வெட்டிக் கொலை செய்யப்பட்ட பெண். அலுவலகத்திற்கு செல்வதற்காக, நேற்று காலை 6.45 மணிக்கு செல்லும் மின்சார ரெயிலில் உள்ள பெண்கள் பெட்டியில் ஏறுவதற்கு வசதியாக இரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் சுவாதி நடந்து சென்று...
Read More

அமெரிக்க பங்கு சந்தை 610 புள்ளிகள் வீழ்ச்சியுடன் நிறைவு!

நியூயார்க் – பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பொது வாக்கெடுப்பு மூலம் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, உலகம் எங்கிலும் பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்தன. அமெரிக்க பொருளாதாரத்தின் நிர்ணய சக்தியாகவும், உலக நாடுகளின் பங்கு சந்தைகளை ஆதிக்கம் செலுத்தும் பொருளாதார அளவு கோலாகவும் பார்க்கப்படும் அமெரிக்க பங்கு சந்தை நேற்று 500 புள்ளிகள் வீழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று, அமெரிக்க பங்கு சந்தை வணிகம் நிறைவடைந்த போது 610 புள்ளிகள் குறைந்து, முடிவடைந்தது. உலகின் மற்ற நாடுகள் பல வற்றிலும்...
Read More
error: Content is protected !!