தீயணைக்கச்சென்ற 38 பேர் கட்டடம் இடிந்து வீழ்ந்துப் பலி

ஈரானில் பழமையான கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீயினை அணைத்துக்கொண்டிருந்த தீயணைப்பு வீரர்கள் மீது கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 30 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் 1960 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ”பிளாஸ்கோ பில்டிங்” எனும் 17 மாடிக்கட்டிடத்தில் நேற்று (19) அதிகாலை தீ பரவியது. 9 ஆவது மாடியில் பற்றிய தீ, மற்ற மாடிகளுக்கும் பரவியது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் விரைந்து சென்றனர். நீரைப் பீய்ச்சி, தீயை அணைக்க பல மணி...
Read More

ஜல்லிக்கட்டு நடத்தப்படும்; முதல்வர் ஓ.பி.எஸ். உறுதி

தமிழகத்தில் ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். டில்லியில் செய்தியாளர்களில் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநில அரசு அவசரச் சட்டம் கொண்டுவரப்படும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசரச் சட்டம் ஓரிரு நாளில் பிறப்பிக்கப்படும். மிருகவதை தடைச்சட்டத்தில் மாநில அளவில் திருத்தம் கொண்டுவரப்பட்டு அவை சட்டவரைவு உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மேற்கொள்வர். இதையடுத்து குடியரசுத்தலைவர் மற்றும் ஆளுநர் ஒப்புதல்...
Read More

ஜல்லிக்கட்டு :கைவிரித்தார்மோடி

ஜல்லிக்கட்டு விஷயத்தில் தற்போதைக்கு எதுவும் செய்ய இயலாது என்று பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்துள்ளார். புது தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். அப்போது, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க அவசரச் சட்டம் இயற்றுமாறு பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு, டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள மோடி, ஜல்லிக்கட்டு கலாசார முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தற்போதைக்கு...
Read More

ஜல்லிக்கட்டு: போராட்டம் தமிழகம் எங்கும் பிரம்மாண்டமாக விரிவடைகிறது!

தமிழகம் எங்கும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளும் இணைந்துள்ளதால், தற்போது இந்தப் போராட்டம் தமிழகத்தின் பல பகுதிகளிலும் விரிவடைந்து, மிகப் பிரம்மாண்டமானதாக உருவெடுத்துள்ளது. இதன் தொடர்பிலான அண்மையச் செய்திகள் பின்வருமாறு: நாளை வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ் நாடு வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. இன்று வியாழக்கிழமை தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் 6.00 மணி...
Read More

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு நயன்தாரா ஆதரவு

ஜல்லிக்கட்டு ஆதரவாக நடைபெற்று வரும் இளைஞர்களின் போராட்ட ஒற்றுமைக்கும், தைரியத்திற்கும் தலை வணங்குகின்றேன் என்று நயன்தாரா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள். இளைஞர்கள் ஒன்றுகூடி நடத்தப்பட்டு வரும் இப்போராட்டத்துக்கு திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்தப்பட்டு வரும் இப்போராட்டத்துக்கு நயன்தாரா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நயன்தாரா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:...
Read More

ஜல்லிக்கட்டு பிரச்சினையில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில் இப்பிரச்சினையில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி தலையிட மறுப்பு தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரியும், பீட்டா அமைப்புக்கு தடை கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை மெரினாவில் 2-வது நாளாக புதன்கிழமை மாணவர்கள், இளைஞர்கள், ஐடி ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், “சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு கோரி...
Read More

இறையாண்மைக்கு மதிப்பளிக்க பழகுங்கள்: சீனாவை மிரட்டுகிறது இந்தியா

சீனா-பாகிஸ்தான் பொருளாதார நடவடிக்கைகளுக்கான பாதை இந்தியா வழியாகவே செல்கிறது என்பதை சுட்டிக்காட்டி இந்தியாவின் இறையாண்மையை சீனா மதிக்கப் பழக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. ரைசினா உரையாடலில் இந்திய வெளியுறவுச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதையில் இந்தியாவின் பிரதேச இறையாண்மை குறித்து சீனா இந்தியாவின் அக்கறைகளில் கவனம் செலுத்துவதில்லை என்று சாடினார். “சீனா தனது இறையாண்மை விவகாரம் என்றால் உடனே உணர்ச்சிவயப்படுகிறது. அதே போல்தான் அவர்கள் மற்றவர்களின் இறையாண்மைக்கும் உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இந்தியாவின்...
Read More

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி நிறுத்தம்

2014 ஆம் ஆண்டு மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370 ஐ தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.எச்.370 போயிங் ரக விமானம் புறப்பட்டுச் சென்றது. அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது. கோலாலம்பூரில் இருந்து 239...
Read More

விஸ்வரூபம் எடுக்கும் ஜல்லிக்கட்டு விவகாரம்: தமிழ்நாடு முழுவதும் போராட்டம்!

சென்னை – ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகமெங்கும் முக்கிய மாவட்டங்களில் இளைஞர்களின் போராட்டம் வலுவடைந்து வருகின்றது. சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மெரினா கடற்கரையில் சுமார் 5000 இளைஞர்கள் ஒன்று கூடி  செல்போன்களின் விளக்குகளை காட்டி தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். அதே போல், மதுரை, திருச்சி நெல்லை, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் இளைஞர்கள் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சரத்குமார் விரட்டியடிப்பு: இதனிடையே, வாடிப்பட்டி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த சமத்துவ...
Read More
error: Content is protected !!