லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரகந்த ஸ்பெசிபன் தோட்டத்தில் நேற்று (15) ம் திகதி மாலை 4.மணியளவில் மினிசூராவளி; காரணமாக தோட்டத்தொழிலாளர்களின் தொடர் குடியிருப்பு ஒன்று சேதமடைந்துள்ளது.
குறித்த தொடர் குடியிருப்பின் கூரை தகரங்கள் காற்றினால் அல்லூண்டு எறியப்பட்டதன் காரணமாக இருவருக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டு அந்த குடியிருப்பில் 14 வீடுகளின் கூரை தகரங்;கள்;,மின் இணைப்புக்கள் சேதமடைந்துள்ளன.
இதனால் குறித்த பகுதிக்கு இரண்டு மணித்தியாலங்கள் மின் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வீடுகளில் வசித்த 74 பேர் தோட்டத்தில் உள்ள சிறுவர் பாராமறிப்பு நிலையத்திலும் உறவினர்களின் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கு தேவையான சமைத்த உணவுகளை வழங்குவதற்கு தோட்ட நிர்வாகம் மற்றும் கிராம சேவகர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மினி சூராவளி மழையில்லாத போது திடீரென ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் தொடர்பாக லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மலைவாஞ்ஞன்