மலையக மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு அக்கரப்பத்தனை ஸ்ரீ லக்ஷ்மி மஹால் மண்டபத்தில் இடம்பெற்றது. மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. ராதாகிருஸ்ணன் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.
இக்கூட்டத்தொடரில் மலையக மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள்,நாட்டின் தற்போதைய நிலைமை,அரசாங்கத்தால் மக்கள் சந்திக்கும் இன்னல்கள்,விலைவாசி உயர்வு,தோட்ட நிர்வாகத்தின் அராஜகங்கள் உட்பட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் உட்பட மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் விஜயசந்திரன்,பிரதி தலைவர் ராஜாராம்,மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன்,நிதிச்செயலாளர் தாளமுத்து சுதாகரன் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நீலமேகம் பிரசாந்த்