அடுத்த மாதமளவில் அரிசி விலையில் எதிர்பாரா அளவில் ஏற்படவுள்ள அதிகரிப்பு!

0
196

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் ஒரு கிலோ அரிசிக்கு இரண்டரை வீத சமூக பாதுகாப்பு வரி செலுத்த வேண்டியுள்ளதாகவும், இதன் காரணமாக அரிசி விலை மேலும் உயரும் என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முடித் பெரேரா தெரிவித்துள்ளார்.அரிசி விலை உயர்வைத் தடுக்க விவசாயியிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் அரிசிக்கான வரித் தொகையை குறைக்க வேண்டும் .இலங்கையில் அரிசி உபரியாக இருக்கும் போதும் வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது .

மேலும் கடந்த 2020/21 பருவத்தில் ஐந்து மில்லியன் மெட்ரிக் தொன் அரிசி உற்பத்தி செய்யப்பட்ட போதிலும், அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாகவும், இயற்கை விவசாயத்தின் காரணமாக அரிசி அறுவடை இல்லாததால் அரிசி இறக்குமதி செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here