அட்டன் செனன் ஜிடி பிரிவுக்கு நலன்புரி கூடாரம் வழங்கி வைப்பு

0
193

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமாரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் அட்டன் செனன் தோட்ட ஜிடி பிரிவுக்கு நலன் புரி கூடாரம் ஒன்றை வழங்கி வைக்கும் நிகழ்வு இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன், தொழிலாளர் தேசிய முன்னணியின் உப தலைவரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான மு.ராம், அட்டன்-டிக்கோயா நகர சபையின் உறுப்பினர் பாலா, தொழிலாளர் தேசிய சங்கத்தின் அட்டன் அமைப்பாளர் ஜெஸ்டின், உதயகுமார் எம்பியின் செயலாளர் ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here