அட்டன்– நுவரெலியா வீதியில் மண்சரிவு எச்சரிக்கை!

0
137

அண்மைக் காலமாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அட்டன் பிரதேசத்திற்குட்பட்ட குடாகம பகுதியில் உள்ள பல வீடுகள் பாரிய மண்சரிவு அபாயத்தில் காணப்படுகின்றன.

அட்டன்- நுவரெலியா பிரதான வீதி குடாகமவில் ஒரு பகுதிக்கு மட்டுமே பாதுகாப்பு பக்கவாட்டு சுவர் கட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டபோது, வீடுகளின் குடியிருப்பாளர்கள் கூட்டாக இணைந்து பிரதான வீதியிலிருந்து வீடுகளுக்குச் செல்லும் படிக்கட்டின் மீதமுள்ள பகுதிக்கு ஒரு பாதுகாப்பு பக்கவாட்டு சுவரைக் கட்டியுள்ளனர்.

அண்மைக்காலமாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பாதுகாப்பு பக்கவாட்டு சுவர் முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளது. புதிய பாதுகாப்பு பக்கவாட்டு சுவரைக் கட்டுவதற்கு நிதி வசதி இல்லை எனவும் எனவே உடனடியாக ஒரு வலுவான பாதுகாப்பு பக்கவாட்டு சுவரைக் கட்டித்தருமாரு குடியிருப்பாளர்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறித்த பகுதியில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக வீடுகளுக்குச் செல்லும் படிகளின் ஒரு பகுதியும், பக்கவாட்டுச் சுவரின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக குடாகம பகுதியில் உள்ள பல வீடுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(எஸ்.ரோஷன்)


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here