அணு ஆயுத திட்டத்தை ஈரான் மீண்டும் தொடங்கினால் தாக்குவோம் – ட்ரம்ப் எச்சரிக்கை!

0
18

அணு ஆயுத திட்டத்தை மீண்டும் தொடங்கினால் ஈரானை தாக்குவோம். அந்த தாக்குதல் தற்போது நடந்ததைவிட மோசமானதாக இருக்கும்,’ என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (25) கூறினார்.

ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் த ஹேக்கில் நடக்கும், ‘நேட்டோ’ எனப்படும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றபோதே ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார் .

இது தொடர்பாக ட்ரம்ப் கூறுகையில், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் எல்லாம் முழுதுமாக அழிக்கப்பட்டுவிட்டது என்று நான் நம்புகிறேன். அவர்களுக்கு அங்கிருந்து எதையும் எடுக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்தளவுக்கு அமெரிக்க படைகள் வேகமாக செயல்பட்டன.

ஈரானின் அணு ஆயுதத் திட்டம் முடிந்துவிட்டது. அவர்கள் அதை மீண்டும் உருவாக்க முயற்சித்தால், நாங்கள் மீண்டும் தாக்குவோம், அது இன்னும் மோசமாக இருக்கும். வெறுமனே போர் நிறுத்தம் வேண்டாம்; உண்மையான முடிவு வேண்டும்.

அதற்கு ஈரான் அணு ஆயுதங்களை முற்றிலுமாக கைவிட வேண்டும். அடுத்த சில நாட்களில் இதைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here