அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் 1977க்கு உடனடியாக அறிவிக்கவும் !

0
156

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் 1977 க்கு உடனடியாக அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை நுகர்வோரை கேட்டுக்கொண்டுள்ளது.

வெள்ளை மற்றும் சிவப்பு நாட்டு அரிசி கிலோ ஒன்றுக்கு 220 ரூபாவாகவும், கீரி சம்பா கிலோ 260 ரூபாவாகவும், சம்பா கிலோ 230 ரூபாவாகவும், சிவப்பு மற்றும் வெள்ளை பச்சை அரிசிக்கு 210 ரூபாவாகவும் நுகர்வோர் அதிகாரசபை கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்துள்ளது.

இந்தக் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க சோதனைகளை ஆரம்பித்துள்ளதாகவும், கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பல வர்த்தகர்கள் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து தினமும் முறைப்பாடுகளைப் பெறுவதாக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here