அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்தால் உடன் அறிவிக்கவும்…..

0
175
நாட்டில் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் அத்தியாவசிய பொருட் கொள்வனவிற்காக நடமாடும் வியாபாரிகளுக்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பதுளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட எல்லைக்குள் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் நடமாடும் வியாபாரிகள் தொடர்பாக அவர்கள் பயன்படுத்தும் வாகன இலக்கத்துடன் பதுளை பிரதேச செயலக காரியாலயத்தின் 0552222238,0552222237 அல்லது 0713460723 என்ற தொலைபேசி இலக்கங்களில் ஒன்றிற்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் வேளையில் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் சில்லறை விற்பனை நிலையங்கள், நடமாடும் வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அனுமதி பத்திரம் ரத்து செய்யப்பட்டு பிரதேசத்தில் உள்ள பொருத்தமானவர்களுக்கு வழங்கப்படும் என நேற்று கூட்டுறவு சேவை, விநியோக அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here