நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை தொடர்ந்து அத்தியவசிய பொருட்களின் விலைகள் என்றுமில்லாதவாறு மிகவும் மோசமான முறையில் விலையுயர்ந்துள்ளன.
அத்தியவசிய பொருட்களின் விலைகள் ஓரளவு நியாய விலையில் சத்தோச நிலையங்களில் கிடைப்பதனால்; நடுத்தர மக்களும் ஏழைகளும், சத்தோச நிலையங்களில் மக்கள் இன்று (10) காலை முதல் நீண்ட வரிசையின் காத்திருக்கின்றனர்.
குறித்த சத்தோச நிலையங்களில் பிரதேசத்தில் கடைகளை விட அரசி மா,சீனி உள்ளிட்ட அத்தியவசிய பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதனால் தற்போது அரசாங்கம் சலுகை விலையில் அத்தியவசிய பொதியொன்று பெற்றுக்கொடுப்பதனாலும் மக்கள் இவ்வாறு வரிசையில் நின்று பெற்றுக்கொள்வதாக சத்தோச நிலையங்களின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
சகல மக்களுக்கு அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளதனால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே அரசி மா,சீனி பருப்பு உள்ளிட்ட சில பொருட்கள் பெற்றுக்கொடுக்கப்படுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் தங்களுடைய குடும்பத்திற்கு தேவையான ஒரு வாரத்திற்கு தேவையான உணவு பொருட்களை பெற்றுக்கொள்ள இரண்டும் மூன்று தடைவைகள் வரிசையில் நின்று வாங்க வேண்டியுள்ளதாக பொது மக்கள் முனுமுனுக்கின்றனர்.
இதே வேளை ஹட்டன் கொட்டகலை,தலவாக்கலை பொகவந்தலாவை உள்ளிட்ட மலையகத்தின் பிரதான நகரங்களில் அத்தியவசிய பொருட்களை வர்த்தகர்கள் ஈவு இரக்கமின்றி தாங்கள் பெற்ற விலையினை விட நாளுக்கு அதிகரித்து கொள்ளை விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் இதனால் மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சிக்கி தினறுவதாகவும்,இது குறித்த அரசாங்கம் கவனமெடுத்து உத்தரவாத விலையில் விற்பனை செய்வதற்கு அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மலைவாஞ்ஞன்