காணொளி ஒன்றை வெளியிடுவதன் மூலம் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிறுத்தப்பட்டமை நேற்றைய தினம் ரசிகர்களிடையேயும் சமூக ஊடகங்களிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு லியோ திரைப்படத்தின் இரண்டாவது பாடலை ரசிகர்களிடம் ஒப்படைக்கவுள்ளனர் படக்குழுவினர்.காணொளி ஒன்றை வெளியிடுவதன் மூலம் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பாரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் #LeoDas என வைரலாக்கி வருகின்றனர்.
Mr. #LeoDas is a #Badass #LeoSecondSingle #BadassFromToday6PM#LEO 🔥🧊 pic.twitter.com/vk8e2RD1yr
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 27, 2023