அனுர கட்சியின் உறுப்பினர் வாள் வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி

0
52

மினுவாங்கொடை பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவரை வாளினால் தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சம்பவத்தன்று, சந்தேக நபர் காயமடைந்தவரது வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ள நிலையில் வீட்டிலிருந்த பூந்தொட்டிகளை உடைத்து வாளினால் தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, காயமடைந்தவர் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது ஒரு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here