அமெரிக்காவில் இந்திய பிரதமர் மோடி பெயரை கார் நம்பர் பிளேட்டாக பயன்படுத்தும் அதிதீவிர ரசிகர்

0
197

2016-ம் ஆண்டு நவம்பரில் இந்த நம்பர் பிளேட்டை வாங்கினேன் என கூறிய ராகவேந்திரா.இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 21 முதல் 24 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்த பயணத்தில், இந்தோ-பசிபிக் பாதுகாப்பு, இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றி ஜோ பைடனுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் வசித்து வரும் ராகவேந்திரா என்பவர் மோடியின் தீவிர ரசிகராக உள்ளார்.தனது காரின் நம்பர் பிளேட்டில் எண்களுக்கு பதிலாக, நரேந்திர மோடியின் பெயரை வெளிப்படுத்தும் வகையில் என் மோடி என்ற பெயர் கொண்ட நம்பர் பிளேட்டை பயன்படுத்தி வருகிறார்.

அவர் கூறுகையில், 2016-ம் ஆண்டு நவம்பரில் இந்த நம்பர் பிளேட்டை வாங்கினேன். அவர் எனக்கு ஒரு உந்துதலாக இருக்கிறார்.அமெரிக்காவுக்கு வரும் மோடியை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here