அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை அந்நாட்டு அரசு அவர்களது சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரு புதிய திட்டத்தை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
ஆவணங்கள் இல்லாத இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வருவோர் இலவசமாக தங்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்வதற்காக இந்த திட்டத்தை அமெரிக்காவின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்துக்கான அறிவிப்பில் தாஜ்மஹாலின் புகைப்படத்தை அந்தத் துறை பயன்படுத்தியுள்ளது.




