இருமல், காய்ச்சல், மூக்கில் சளி வடிதல், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவது ஆகியன இந்த நோயின் பிரதான அறிகுறிகளாகும். கொரோனா மற்றும் குரங்கம்மை நோய்கள் பரவுவது குறைந்து வரும் சூழ்நிலையில், மரணத்தை ஏற்படுத்தக்கூடிய நிமோனியா நோயை பரப்பும் எச்.எம்.பீ..வீ என்ற ஹியூமன் மெடநிவுமோ வைரஸ் சுவாச நோய் அமெரிக்க உட்பட மேற்குலக நாடுகளில் அதிகளவில் பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா நோய்க்கான அறிகுறிகள் மற்றும் காய்ச்சல் நோய் அறிகுறிகளை கொண்ட இந்த நோய் நான்கு வருடங்களுக்கு முன்னர் வயதானவர்களுக்கு ஏற்பட்ட வந்த நிலையில், தற்போது மரணத்தை ஏற்படுத்தக்கூடிய நிமோனியா நோயாக மாறியுள்ளது.
இருமல், காய்ச்சல், மூக்கில் சளி வடிதல், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவது ஆகியன இந்த நோயின் பிரதான அறிகுறிகளாகும்.
இந்த வைரஸ் நோய் பற்றி பலரும் அறியாது இருக்கும் நிலையில், எதிர்காலத்தில் இது முக்கியமான வைரஸாக மாறலாம் என அமெரிக்காவின் பீட்டர்பேர்க் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பரவும் இந்த நோய் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.