இந்த ஆண்டு இதுவரை அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 3.4 சதவீதம் குறைந்துள்ளது என மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்திர பொருளாதார தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
திறைசேரி உண்டியல் மற்றும் முறிகள் இந்த வாரத்தில் பரவலாக நிலையாக இருந்ததாக அறிக்கை தெரிவித்துள்ளது.
இதேநேரம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் முறிகள் மற்றும் பத்திரங்களின் ரூபாய் மதிப்பு கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 8 சதவீதம் அதிகரித்துள்ளது.