இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் உயரிய சட்டமான அரசியலமைப்பின் 2 ஆம் அத்தியாயம், இலங்கைக் குடியரசில் பௌத்த மதத்திற்கு முதன்மை ஸ்தானத்தை வழங்குவதோடு, ஏனைய சகல மதங்களுக்கும் அதற்குரிய உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், பௌத்தத்தைப் பாதுகாத்து போஷிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாக அமைந்து காணப்பட வேண்டும் என்றும் அது கூறுகிறது. புத்த சாசனத்தையும் அதனது நிலைத்தன்மைக்காகச் செயற்படும் மகா சங்கத்தினரைப் பாதுகாப்பதும், அதன் நீண்ட கால இருப்பும், சங்க மரபின் நடைமுறைகள் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்தலும் அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக அமைந்து காணப்பட வேண்டும் என்றாலும், தற்போதைய அரசாங்கம் அந்த கலாச்சார பாரம்பரியத்தை புறக்கணிப்பதாகத் தெரிகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தலைவர் தெரிவித்தார்.
1979 ஆம் ஆண்டின் 64 ஆம் இலக்க பிரிவேனா கல்விச் சட்டத்தைத் திருத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதும், இதன் மூலம், பாரம்பரிய பிரிவேனா கல்விக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பதன் காரணமாக பல பிரச்சினைகள் எழுந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் பிரகாரம், இந்த விடயம் தொடர்பாக அவர் இன்று (12) பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளைகள் 27(2) இன் கீழ் கேள்வி எழுப்பினார்.
2025 ஆம் ஆண்டில் புத்தசாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு மற்றும் அதன் பௌதீக மற்றும் நிதி முன்னேற்றம், 2026 ஆம் ஆண்டில் இந்த அமைச்சின் கீழ் பௌத்த மதத்தின் முன்னேற்றத்திற்காக முன்னெடுக்கப்படும் திட்டங்கள் போலவே அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை என்பவற்றை முன்வைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.




