அரசாங்கம் விவசாயத்தையும் சீனாவிற்கு தாரைவார்க்க முயற்சிக்கின்றது ராதாகிருஸ்ணன் சீற்றம்.

0
216

நாட்டில் தற்போது உரப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதனால் பல விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.ஹைபிரிட் விதைகளை இறக்குமதி செய்துவிட்டு கால அவகாசம் ஏதுமுன்றி ஆர்கனிக் முறையில் விவசாயத்தை செய்ய சொல்வது தற்போது விவசாயிகளை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஹைபிரிட் விதைகளுக்கு சரியான உரம் இட்டால் மாத்திரமே சரியான விளைச்சலை பெற முடியும். அப்படியிருக்கையில் உரங்களை பதுக்கி வைத்து சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உரங்களை கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகுவது போல் தெரிகின்றது.அல்லது சீனாவில் அழுத்தத்தால் உரங்களை பதுக்கி முழு விவசாயத்தையும் இலங்கையில் சூனியமாக்கிவிட்டு விவசாயத்துறை முழுவதையும் சீனாவிற்கு தாரைவார்ப்பதற்கான முதற்கட்ட ஏற்பாடாக கூட இவ் உரப்பிரச்சனை நாட்டில் உருவாகியிருக்கலாம் என குறிப்பிட்டார்.

மேலும் போர்ட்சிட்டி எப்படி சீனாவிற்கு தாரைவார்க்கப்பட்டதோ அதேபோல கொழும்பில் போர்ட்சிட்டியை சூழவுள்ள முக்கிய கட்டிடங்கள் சீனாவிற்கு தாரைவார்க்க முயல்வதாகவும் விவசாயத்தையும் சீனாவின் பிடிக்குள் கொண்டு செல்ல முயற்சிப்பதாகவும் வே.ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here