அரச வைத்தியசாலைகளில் நிலவும் முறைகேடுகள் : மக்களுக்கான விசேட அறிவிப்பு!

0
63

அரச வைத்தியசாலைகளில் நிலவும் முறைகேடுகள், பணி செய்யாத நிலை, கடமை நேரத்தில் உத்தியோகத்தர்கள் இல்லாமை, கடமை நேரத்தில் தனியாரில் பணியாற்றுதல் உள்ளிட்ட முறைப்பாடுகளை தகுந்த ஆதாரங்களுடன் பொதுமக்கள் மேற்கொள்ள முடியும்.

Senior assistant secretary (flying squad)
Ministry of Health
No 26, Medi House Building
Sri Sangaraja mawatta,
Colombo 10
T.P & fax – 0112 112 706

அவ்வாறு செய்யப்படும் முறைப்பாடுகளின் விசாரணை நிலை, முடிவுகள் தொடர்பாக அறிந்து கொள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தவும்.

Ex : உதாரணமாக :-
வைத்திய நிபுணர்களில் பெரும்பாலானோர் 4 Pm to 6 pm or 8 pm வரை மேலதிக நேரம் கோரிப் பெறுகின்றனர். ஆனால் அந்நேரத்தில் அவர்கள் தனியார் வைத்தியசாலைகளுக்குச் செல்கின்றனர்.

அதே போன்று சத்திர சிகிச்சை கடமை நேரத்தில் / சத்திர சிகிச்சை செய்த மறுநாள் Observation கடமை நேரத்தில் தனியாரில் பணியாற்றுகின்றனர்.

இத்தகைய நுணுக்கமான விடயங்களையும் ஆதாரங்களுடன் முறைப்பாடாக பதிவு செய்ய முடியும் என சுகாதார அமைச்சினால் அறியத்தரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here