நியூசிலாந்து – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து குழாத்தில் வேகப்பந்துவீச்சு சகலதுறைவீரரான ஸேக் போல்க்ஸ் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்டில் இதுவரை அறிமுகம் பெறாத போல்க்ஸ், ஜிம்பாப்வே உடனான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் உபாதைக்குள்ளான நேதன் ஸ்மித்தினை பிரதியீடு செய்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அதேநேரம் வயிற்றுப்பகுதியில் உபாதையை எதிர்கொண்டுள்ள நேதன் ஸ்மித் பூரணமாக குணமடைய இன்னும் நான்கு வாரங்கள் வரை தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து குழாத்தில் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான பென் லிஸ்டர் மேலதிக வீரராக மேலதிகமாக உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக விடயமாகும்.
ஜிம்பாப்வே – நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியானது வியாழன் (07) புலவாயோவில் ஆரம்பமாகுகின்றமை குறிப்பிடத்தக்கது.