அல்லு அர்ஜுன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக உள்ள ’ஏஏ23’(AA23) திரைப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ‘ஸ்ட்ரீ 2’ பட வெற்றிக்குப் பிறகு ஷ்ரத்தா கபூர் இந்த பான்-இந்திய படத்தில் அல்லு அர்ஜுனுடன் ஜோடி சேர பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுன் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஒரு சிறப்பு வீடியோ மூலம் வெளியான இந்த அறிவிப்பு, ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புஷ்பா படங்களை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ். இந்தப் படத்தையும் பிரமாண்டமாக தயாரிக்கிறது.




