அவசரகால பிரகடனத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கண்டனம்

0
142

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அவசரகால பிரகடனத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் தீர்வைக்கோரி மக்கள் வீதியில் இறங்கி போராடிவரும் நிலையில் அவசரச் சட்டம் பிறப்பிப்பதால் தீர்வாகாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சூழலில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அது இல்லாமல் பொருளாதார மறுமலர்ச்சி சாத்தியமற்றது என்றும் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை பிரதி சபாநாயகரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் ரஞ்சித் சியம்பலபிட்டியவிற்கு எதிராக வாக்களித்ததாகவும் அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து வாக்களிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here