அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட நான்கு இலட்சம் பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், சுமார் இரண்டு நாட்களாக இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டாம் கட்ட கணக்கெடுப்புக்காக பெறப்பட்ட 450,000 இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் இன்றுடன் (31) நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இது தொடர்பாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவிக்கையில், “மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடர்வது குறித்து தேர்தல் ஆணையகத்திடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகளின் தலையீடு இன்றி அதிகாரிகளினால் இந்த கணக்கெடுப்பு நடைபெறுவதால் தேர்தல் காலத்திலும் இதனைத் தொடர அனுமதி வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கடிதம் நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் ஆணைக்குழுவின் யோசனைக்கு அமைய மேலும் பணிகள் மேற்கொள்ளப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.