அஸ்வெசும கொடுப்பனவிற்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்

0
254

அஸ்வெசும திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள மேலும் சில பயனாளர்களுக்கான கொடுப்பனவுகள் நாளை(01) முதல் வங்கிகளுக்கு விடுவிக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

சுமார் 06 இலட்சம் பயனாளிகளுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் கமல் பத்மசிறி குறிப்பிட்டார்.

அதேவேளை, மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், உண்மையான தகவல்கள் உறுதி செய்யபட்ட 8 இலட்சம் பயனாளிகளுக்கு ஜூலை மாதத்திற்கான பணத்தை கடந்த திங்கட்கிழமை வங்கிகளில் வரவு வைப்பதற்கு நலன்புரி நன்மைகள் சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here