ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுமாயின் 119 அவசர அழைப்புப் பிரிவுக்கும் இது தொடர்பில் அறிவிக்க முடியும்.

0
241

ஆன்லைன் முறையில் பாடசாலை மாணவர்களுக்கு கற்பித்தலை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு, எவரேனும் ஒருவரால் ஏதாவதொரு வகையில், குறித்த கற்பித்தல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அச்சுறுத்தல் விடுக்கப்படுமாயின் அது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு நேரடியாக முறைப்பாடு செய்யுமாறு காவல்துறை  தலைமையகம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளனர்.

அவ்வாறே, குறித்த ஆசிரியர்கள் அவசியம் ஏற்படின் 119 காவல்துறை அவசர அழைப்புப் பிரிவுக்கும் இது தொடர்பில் அறிவிக்க முடியும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வாறான முறைப்பாடுகள் தெடர்பில் தாமதிக்காமல், சரியான முறையில், மிகவும் கடுமையான சட்டநடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here