நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று நோய் அதிகரித்து பாரிய பிரச்சனையையும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது இந்த இக்கட்டான காலகட்டத்தில் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் 1997 ஆம் ஆண்டு இருந்து வஞ்சிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டதாக கூறப்படும் சம்பள முரண்பாட்டை தீர்த்துக் கொள்வதற்காக தற்போது முற்பட்டு வருகின்றார்கள்.
இந்த இறுக்கமான சூழ்நிலையிலும் அமைச்சரவை கூடி நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை உப குழுவை நியமித்து அவர்களுடைய சம்பள பிரச்சினையில் ஒரு பகுதியை 5000 ரூபாவை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளார்கள்.
தற்போது நாட்டின் நிலைமையை புரிந்து கொண்டு அதிபர் ஆசிரியர்கள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் புஸ்பானந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.
நீலமேகம் பிரசாந்த்