ஆண்களின் முகத்தில் ஏற்படக்கூடிய கருமையை போக்குவதற்கு வீட்டிலிருந்தே கைவைத்தியம்.!

0
157

அழகு என்று நினைத்தவுடன் பெண்களும் அவர்களுக்கான ப்யூட்டி ப்ராடெக்ட்களும் தான் நினைவுக்கு வரும். அழகை பராமரிப்பது என்பது எதோ தேவையற்ற விஷயம் போல சிலர் நினைக்கிறார்கள் இது மிகவும் தவறான போக்கு, அழகு என்பது நம் சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பது என்பது தான் நிதர்சனம்.

ஆண்கள் ஆடைகளுக்கு கேட்ஜெட்ஸ்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் முகத்திற்கு கொடுப்பதில்லை தான். அழகு பெண்களுக்கானது மட்டுமா என்ன? இதோ ஆண்களுக்கான சில ப்யூட்டி டிப்ஸ்… அதுவும் எளிதாக வீட்டிலேயே செய்யலாம்.

வெள்ளரிக்காய் :

பெரும்பாலும் ஆண்கள் வெயில் சுற்றித் திரிபவர்களாகத் தான் இருப்பார்கள் அவர்களுக்காக இந்த வெள்ளரிக்காய் மாஸ்க். வெள்ளிரிக்காயை நன்றாக அரைத்து அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள் 10 நிமிடம் கழித்து கழுவி விடலாம். வாரத்திற்கு இரண்டு முறை இப்படி செய்யலாம். இதனால் வெயிலானல் முகம் கருக்காது, அத்துடன் இறந்து போன செல்களை நீக்கவும், முகத்திற்கு தேவையான எண்ணெய் பசையை தக்க வைக்கவும் உதவிடும்.

குறிப்பு : தேனுக்கு பதிலாக தயிரையும் பயன்படுத்தலாம்.

மிருதுவாக

முகம் உலர்ந்து சொர சொரப்பாக இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கருவுடன், பாலாடை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் அப்ளை செய்து கொள்ளவும் பின்னர் இளஞ்சூடான நீரில் முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து இதை செய்து வந்தால் தோல் மிருதுவாக மாறும்.

கரும்புள்ளி

முகத்தில் அதிகமாக கரும்புள்ளி இருந்தால் எலுமிச்சம் பழச்சாறுடன், தயிரை கலந்து தேய்த்து வந்தால் நல்ல மாற்றத்தை உணரலாம்.

சிகரெட்

சிலர் புகைப்புடிப்பதால் அவர்களின் உதடு கறுப்பாக இருக்கும். அவர்கள் பீட்ரூட் சாறு, மாதுளம்பழச்சாறு அல்லது புதினா சாறு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை உதடுகளில் தடவி வந்தால் உதடுகளில் உள்ள கறுப்பு நிறம் மறைந்திடும்.

புத்துணர்ச்சி

சிலருக்கு முகம் எப்போதும் முகம் சோர்வாகவே காணப்படும். அவர்கள் ஒரு ஸ்பூன் தேனுடன் அரைத்த ஆப்பிள், முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள் பின்னர் அதனை முகத்தில் தடவி இருபது நிமிடங்களில் முகத்தை கழுவினால் முகம் புத்துணர்சியாக இருக்கும்.

தக்காளி

முகத்தில் அதிக எண்ணெய்ப் பசை இருப்பவர்கள் தக்களிப்பழத்தை மசித்து அதனை முகத்தில் தடவி பத்து நிமிடத்தில் கழுவினால் அதீத எண்ணெய் பசையை கட்டுப்படுத்தலாம்.

முக்கியம் :

மன அழுத்தம், தலையை சரியாக பராமரிக்காதது, சரிவிகித உணவு இல்லாதது, தூக்கமின்மை போன்ற காரணங்களால் ஆண்களுக்கு நிறைய முடி கொட்டும். அதனால் சரிவிகித உணவிற்கும் அமைதியான மனதிற்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here