ஆபத்தான நிலையில் மாஸ்டர் சிவசங்கர் உடல்நிலை

0
199

நடன இயக்குநரும், நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் கொரோனா தொற்றால் ஆபத்தான நிலையில் இருக்கிறார் என தகவல்.

மண் வாசனை, திருடா திருடி, மகதீரா, பாகுபலி உள்ளிட்ட படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ள சிவசங்கர் மாஸ்டர், மகதீரா படத்தில் தீர தீர என்ற பாடலுக்கு நடனம் அமைத்ததற்காக தேசிய விருதையும் பெற்றுளார்.

நடன இயக்குநரும், நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி மூத்த மகன் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிவசங்கர் மாஸ்டர் கொரோனா பாதிப்பால் ஆபத்தான நிலையிலிருந்து இருந்து வருகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here