ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய ஆசிரியர்கள் நியமனம்

0
82

1,706 பட்டதாரிகளுக்கு புதிய ஆசிரியர் நியமனங்களை அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) வழங்கியுள்ளார். கொழும்பு அலரி மாளிகையில் வைத்து இன்று (03) காலை அதிபர் இந்த நியமனங்களை வழங்கி வைத்துள்ளார்.

அத்துடன், 453 ஆங்கில டிப்ளோமாக்களை பெற்றவர்களும் தேசிய பாடசாலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இதேவேளை, குறித்த நிகழ்வின் போது இலங்கை கல்வி நிர்வாக சேவையின் மூன்றாம் தர பொது ஊழியர் வெற்றிடங்களுக்கு 60 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில், இன்று (3) முதல் கல்வி கட்டமைப்பில் புதிதாக 1,875 அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து கொள்ளவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here