ஆயிரம் ரூபா சம்பளத்தினை பெற்றுத்தர கோரி தோட்டத்தொழிலாளர்கள் மஸ்கெலியாவில் ஆர்ப்பாட்டம்.

0
184

மஸ்கெலியா பெருந்தோட்டத்திற்கு சொந்தமான மஸ்கெலியா பிரவுசிக் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்ட 1000 ரூபா சம்பளத்தினை பெற்றுத்தர கோரி இன்று (21) திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

குறித்த ஆரப்பாட்டத்தில் ;பெருந்தோட்டத்திற்கு சொந்தமான ஏழு பிரிவுகளைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தொழிற்சங்க கட்சி பேதமின்றி கலந்து கொண்டிருந்தனர்.

தொழிலாளியை நசுக்காதே, ஏனைய கம்பனிகளை போல ஆயிரம் ரூபா பெற்றுக்கொடு, போராட்டத்தை தொடர்வோம் போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்த தொழிற்சங்கங்கள் கருத்து தெரிவிக்கையில் 22 பெருந்தோட்ட கம்பனிகளில் மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனி மாத்திரம் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்காததன் காரணமாக தொடர்ச்சியான போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

இது குறித்து ஆர்பாட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில் இன்று கோதுமை மா ஒரு கிலோ 400, அரசி 220 ரூபா, அத்தியவசிய பொருட்கள் எல்லாவற்றிக்கும் என்றுமில்லாதவாறு உயர்ந்துள்ளது 200 ரூபா 300 ரூபா சம்பளத்தினை பெற்றுக்கொண்டு உயிர் வாழ்வது எப்படி, பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுப்பது எப்படி? ஏனைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது எப்படி? பிள்ளைகளை படிக்க வைப்பது எவ்வாறு போன்ற கேள்விகளை எழுப்பினர்.

கம்பனிக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க முடியாவிட்டால் வேறு யாரிடமாவது கம்பனியினை ஒப்படைத்து விட்டு செல்லுமாறு ஆர்ப்பாட்ட காரர்கள் மேலும் தெரிவித்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 400 மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here