ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை – பூஜை செய்ய நல்ல நேரம் எப்போது? ஜோதிடர்கள் சொல்வதென்ன?

0
182

ஆயுத பூஜையன்று சரஸ்வதி தேவிக்கும், பார்வதி தேவிக்கும், லக்‌ஷ்மி தேவிக்கும் தான் முக்கியத்துவம்.
நவராத்திரி விழா நாள்களில் ஒவ்வொரு நாள்களும் கோலங்கள், தானியங்கள் என ஒன்பது விதமாக சிறப்பு பூஜைகள் எல்லாம் நடத்தப்படும். வீடுகளில் கொலு வைத்து விதவிதமான பொம்மைகளால் அலங்கரித்து, வீட்டிற்கு வருபவர்களை நன்றாக உபசரித்து அனுப்புவர். நவராத்திரி முதல் மூன்று நாள்கள் லட்சுமிக்கும் அடுத்த மூன்று நாள்கள் சக்திக்கும் கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. இந்த விழா காலத்தில் கோயில்களில் கொலு வைத்து சிறப்பு வழிபாடு இருக்கும். ஒன்பது மலர்கள், பழங்கள், ஒன்பது தானியங்கள், ஒன்பது பிரசாதங்கள் என ஒன்பது விதமான அலங்காரங்கள் என அம்மனை வழிபடுவர்.

ஒன்பதாம் நாள் நவமி திதியில் ஆயுதங்களுக்கு பூஜை செய்து, தசமி திதியில் அம்பாளின் வெற்றியை கொண்டாட சிறப்பு பூஜையுடன் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. கல்வியில் சிறந்த விளங்க சரஸ்வதியை வழிபடுவது வழக்கம். அம்மன் சரஸ்வதியாக அருள்பாளித்த நாள் கலைவாணிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. விஜய தசமி நாளில் நல்ல காரியங்கள் தொடங்குவது, குழந்தைகளுக்கு எழுத பழக்குவதி உள்ளிட்டவை முன்னெடுப்பது நன்மை தரும் என்று நம்பப்படுகிறது.

நல்ல நேரம்
23-ம் தேதி திங்கள்கிழமையும் மறுநாள் (24.10.2023) விஜய தசமியும் கொண்டாடப்படுகிறது.

23-ம் தேதி அன்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரையிலும் மதியம் 12க்கு மேல் 1.30 க்குள் பூஜை செய்ய நல்ல நேரம் என ஜோதிட நிபுணர்கள் சொல்கின்றனர்.

மாலையில் 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் பூஜை செய்யலாம். அதனை தொடர்ந்து இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை பூஜை செய்து இறைவனை வணங்க நல்ல நேரம் ஆகும்.ஆயுத பூஜையன்று சரஸ்வதி தேவிக்கும், பார்வதி தேவிக்கும், லக்‌ஷ்மி தேவிக்கும் தான் முக்கியத்துவம்.

சரஸ்வதி பூஜை
அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, பூஜையறையைக் சுத்தம் செய்து கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். உரிய சுபவேளையில் சரஸ்வதி தேவியை புத்தகம், படம், விக்ரகம் அல்லது கலசத்தில் அலங்கரிக்கலாம்.

பிள்ளைகளின் பாடப்புத்தகங்களை அடுக்கி சரஸ்வதி படம் அல்லது சிலைக்கு மாலை மலர்களால் அலங்காரம் செய்து சந்தனக் குங்குமத் திலகம் இட்டு அலங்கரிக்க வேண்டும்.

நைவேத்தியம்
சிறப்பு பூஜையுடன் நெய்வேத்தியமாம சரஸ்வதி தேவிக்கு பிரியமான சர்க்கரை பொங்கல், புளியோதரை, சுண்டல், பொறி, பழங்கள் ஆகியவற்றை படைக்கலாம். வாழைப்பழம் ,பூ, ஊதுபத்தி, சாம்பிராணி வைத்து விளக்கேற்றி தீபாராதனை காட்டி இறைவனை வழிபடலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பாசிப்பயறு சுண்டல், இனிப்பு போலி, கொண்டக்கடலை சுண்டல் மற்றும் இனிப்பு வகைகள் என்று தினம் செய்வது வழக்கம். பண்டிகை என்றாலே உணவும் அதை பகிர்ந்து உண்ணுவதுதானே. அப்படி, நவராத்தி விழா நாட்களில் நண்பர்கள், குடும்பத்தினர் வீடுகளுக்கு சென்று வரலாம்.

விஜய தசமி நாளில் புதிதாக தொடங்கப்படும் எந்த செயலும் நல்லபடியாக நடக்கும் என்பதில் பெரும் நம்பிக்கை உண்டு. சில கோயில்களில் விஜய தசமி நாளில் பள்ளிக்குச் செல்ல இருக்கும் குழந்தைகளுக்கு நெல், அரிசியில் எழுதி இறைவன் ஆசியுடன் அவர்களின் குழந்தைகளின் கல்வி பயணத்தை தொடங்குவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here