ஆர்வத்துடன் தடுப்பூசி பெற்று கொண்ட லிந்துல ராணிவத்த மக்கள்!

0
144

மிக வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் ஒரு சில பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நேற்றையதினம்(09) லிந்துல பம்பரகெலை த.வி யாலயத்தில்
சீன தயாரிப்பான சினோ பாம் தடுப்பூசியின் இரண்டாம் டோஸே நேற்று லிந்துல ராணிவத்த ,நோனதோட்டம் கிராம பிரிவுகளில் உள்ளவர்களுக்கும் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து தமது இடங்களுக்கு வந்துள்ளவர்களுக்கும் ஏற்றப்பட்டது.

அந்தவகையில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சைனோபாம் தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் செலுத்தும் பணிகள் பம்பரகெலை தமிழ் வித்தியாலயத்தில் நேற்று காலை முன்னெடுக்கப்பட்டது.
இதனை பெற்றுக்கொள்வதற்காக அதிகளவிலான பொது மக்கள் காத்திருந்து தடுப்பூசியை பெற்றுக் கொண்டனர்.

செய்தி-பாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here