அலவ்வ பிரதேசத்தில் உள்ள மா ஓயா ஆற்றில் நீராட சென்ற பாடசாலை மாணவர்கள் ஐந்து பேர் அடங்கிய குழுவில் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், நீரில் மூழ்கிய மற்றுமொரு மாணவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பொல்கஹவெல யாங்கல்மோதர பிரதேசத்தில் இருந்து மாஓயாவில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதில் பொல்கஹவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.