இக்கட்டான தருணத்தில் கைகொடுக்கும் தமிழக முதலமைச்சர் ; எஸ்.ஆனந்தகுமார் நன்றி!

0
134

இலங்கை பொருளாதார ரீதியாக மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் தத்தளித்துக்கொண்டிருக்கும் தருணத்தில் கைகொடுக்க நடவடிக்கை எடுத்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் நன்றி தெரிவித்துள்ளார்.

நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்குவதற்கு இந்திய மத்திய அரசிடம் அனுமதிகோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டபேரவையில் தனிநபர் தீர்மானம் ஒன்றை முன்வைத்து நிறைவேற்றியுள்ளார்.

இதற்கமைய, 80 கோடி ரூபாய் பெறுமதியான 40,000 மெட்ரிக் டன் அரிசி, 137 மருந்து பொருட்கள் (28 கோடி ரூபா) மற்றும் குழந்தைகளுக்காக 500 டன் பால்மா (15 கோடி ரூபா) என்பவற்றை வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இவற்றை தமிழக மாநில அரசினால் நேரடியாக வழங்க முடியாது என்பதால், இலங்கையில் உள்ள இந்தியா தூதரகம் ஊடாக வழங்கிவைக்க இந்திய மத்திய அரச அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளமை மூலம் இலங்கை மக்கள் மீதும் தமிழ் மக்கள் மீதும் தமிழகம் கொண்டுள்ள அக்கறை கண்கூடாக தெரிகிறது. தமிழகம் முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை இந்த தருணத்தில் தெரிவிப்பதுடன் மலையக மக்களுக்கும் தமிழகத்துக்கும் இடையிலான உறவுப்பாலம் மேலும் வலுவாக்கப்பட வேண்டுமென வும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here