இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா – அச்சத்தில் மக்கள்

0
262

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா பரவி வருகின்ற நிலையில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எரிஸ் (Eris) என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா இங்கிலாந்து முழுவதும் அதிகமான மக்களிடம் வேகமாக பரவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக அங்கு அதிக அளவிலான மக்களுக்கு தலைவலி, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன.

இதையடுத்து இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு முகவரகம் இது குறித்து ஆராய்ந்த போது இது ஒமிக்ரோனின் மாறுபாடு அடைந்த வைரஸ் கிருமி என கண்டறியப்பட்டது.

தற்போது இந்த வைரஸ் இங்கிலாந்தில் ஏழு பேரில் ஒருவருக்குப் பரவியிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. இதற்கு கிரேக்க தெய்வத்தின் பெயரான எரிஸ் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here