ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று பிற்பகல் 3 மணிக்கு கண்டியில் உள்ள பல்லேகலே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து – இலங்கை அணிகள் மோதுகின்றன.
நடப்பு டி 20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி தனது அனைத்து லீக் ஆட்டங்களையும் இந்தியாவில் விளையாடி இருந்த நிலையில் தற்போது சூப்பர் 8 ஆட்டங்களை இலங்கையில் விளையாட உள்ளது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் இலங்கை மண்ணில் அந்த அணிக்கு எதிராக நடைபெற்ற இருதரப்பு டி 20 தொடரை ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றிருந்தது.




